Tamil: HORDI Crop – Kohila

HORDI - LOGO

கொகிலை

Lasia spinosa

கொகிலையின் இலை மற்றும் வேர்தண்டு கிழங்குகள் பிரசித்திமிக்க மற்றும் போசணைமிக்க உணவு. உயர் நார்தன்மை கொண்டமையால் இது மூல நோய் மற்றும் வயிற்று வலிக்கு உகந்தது

பெறக்கூடிய வகைகள்

கொகில இரு வகைக் கொண்டது

சுதேச கொகிலை – இலைகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்காது. குறைந்த வளர்ச்சி மற்றும் விளைச்சல். வேர் தண்டு கிழங்குகள் ஒப்பிட்டளவில் சிறியது மற்றும் சதைப்பற்றுள்ளவை.

வெளியூர் கொகிலை- இலைகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். உயர் வளர்ச்சி வீதத்தை காட்டும் மற்றும் உயர் விளைச்சல். உள்ளூர் வர்க்கத்தை விட பெரிய வேர்தண்டு கிழங்கு மற்றும் சதைப்பற்றானது.

காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

செய்கைக்கு மணற்பாங்கான சூழல் பொருத்தமானது

மண்

அடிக்கடி நீர் தேங்கும் மண் உள்ள இடங்களில் மாத்திரம். ஈர நிலங்களுக்கு கொகிலை ஒரு பொருத்தமான பயிர். ஆகையால், பயிருக்கு நிழல் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. நிழல் இல்லாத போது இலைகள் குறுகும்.

கள தயார் படுத்தல் மற்றும் நடுகை செய்தல்

சேற்று பிரதேசத்தில், குறித்த காலத்தில் மண்ணை 20-25செ.மீ ( 8-10 அங்குல) அளவிற்கு உழுவதன் மூலம் களைகளை அழிக்கலாம் மற்றும் மேலதிக நீர் தேங்கும் இடத்தில் நீரை வழிந் தோடச் செய்தல். 5 அடி அகலமான பாத்திகளை அமைத்தல் மற்றும் தேவையான போது நீர் வழங்க போதுமான நீளத்தை உறுதிசெய்தல் மற்றும் வழமையான இடைவெளியில் மண்ணில் சில வரிகளை இடல்

செய்கை காலம்

பரிந்துரைக்கப்பட்ட சூழல் காரணிகளுக்கமைய வருடம் முழுவதும் துண்டங்களை வளர்க்கலாம்

நடுகை பொருள்

உச்சி வெட்டுத்துண்டம் 20-25செ.மீ (8-10 அங்குலம்) அளவு பொதுவாக நடுகை செய்ய பயன்படுத்தப்படும். கொகில தண்டில் உள்ள கிடை தளிர்களை முதிர்ச்சியின் பின் பயன்படுத்தலாம்.

மேலும், சேற்றுப்பாங்கான நிலத்தில், நிழலான இடத்தில் தயாரிக்கப்பட்ட நாற்று மேடைகளில்  ஆழமற்ற முறையில் தண்டுகள் புதைக்கப்படல். தளிர்கள் முளைக்க இடமளித்தல் மற்றும் குறைந்த காலத்தில் அதிக எண்ணிக்கையான தளிர்கள் காணப்படின் அவற்றை நடுகைக்கு பயன்படுத்தலாம்.

நடுகை இடைவெளி

சேற்று நிலத்தில், மண்ணை 20-25செ.மீ (8-10 அங்குல) ஆழத்தில் உழுவதன் மூலம் களைக்கட்டுப்பாட்டை செய்யலாம். மற்றும் மேலதிக நீர் தேங்கும் இடத்தில் நீரை வழிந்தோண்டச்செய்தல். 5 அடி அகலமாகவும் நீர் பாய்ச்ச போதுமான நீள அளவிலும் நாற்று மேடையை தயார் செய்தல். குறித்த இடைவெளியில் தடிகளின் மூலம் சில வரிகளை தோண்டல்.

பசளையிடல்

சேதன பசளையிடல்

செய்கை ஆரம்பிக்க முன், பல்வேறு உக்கிய சேதனபசளை மற்றும் இலைபசளையை  மேடையில் இட்டு  கலத்தல்.முறையான சேதன பசளை சேர்க்கை மண் ஈரப்பதன் மற்றும் மண் வளத்தை அதிகரிக்க உதவும். சேதன உரமாக மாட்டெரு இடுவதால் அவை களைகளின் இருப்பை வெகுவாக அதிகரிக்கும்.

இரசாயன பசளை (Kg/100m2)

பசளையிடல்

யூரியா

முச்சுபர் பொசுபேற்று

மியூரைட் பொட்டாசு

அடிக்கட்டு பசளை

1.0

1.5

1.0

மேற்கட்டுபசளையிட்டு 4 வாரங்களின் பின்

1.0

1.0

ஒவ்வொரு அறுவடையின் பின்னர்

1.5

1.5

குறிப்பு 1- மண் பரிசோதனையின் பின் பொசுபரஸ் மற்றும் பொட்டாசியத்தை அடிக்கட்டு பசளையாக இடல் சிறந்தது

நீர் விநியோகம்/ நீர் பாசனம்

எவ்வாறாயினும் பயிருக்கு ஈரப்பதன் அவசியம், நீரின் நீண்டகால வெளிப்பாடு வளர்ச்சியை பலவீனமடைய செய்கிறது. ஆகையால், குறித்த நேரத்தில் பயிருக்கு நீர்பாசனம் செய்யும் படி முக்கியமானது.

களைக்கட்டுப்பாடு

கொகில செய்கையிலுள்ள முக்கிய பிரச்சினையானது களைக்கட்டுப்பாடு. தளிர் அல்லது அரும்புகளின் நடுகையின் பின், வைக்கோலை பத்திரக்கலவையாக நிலத்திற்கு இடலாம். செய்கையின் பல்வேறு மட்டங்களில் காலப்போக்கில் பத்திரக்கலவையால் களைகளும் கட்டுப்படுத்தப்படும்.

Pest Management

நோய் முகாமைத்துவம்

நோய் காரணி : Fusarium sp.

அறிகுறிகள் :

கிழங்கின் மேற்பரப்பு அழுகல் அடைதல் இலைகள் மஞ்சளாதல்

முகாமைத்துவம் :

பாத்தியில் இருந்து நீரை அகற்றி சுண்ணாம்பிடல் (40 கிராம் / 1 சதுர வேர் பரப்பு) அல்லது Homi / Captan, Thiram போன்ற பங்கசு நாசினிகளை பைக்கற்றுகளின் உள்ள விளக்கத்துக்கமைய தெளித்தல்

 

நோயாக்கி : Ralstonia solanacearum

அறிகுறிகள் :

கிழங்குகள் அழுகும் கிழங்குகளின் உட்புறம் கபில நிறமாகும். நீரில் இடும் போது பிசின் வெளியேற்றத்தை அவதானிக்கலாம்.

முகாமைத்துவம்:

பாதிப்புற்ற தாவரங்களை அகற்றி சுண்ணாம்பிடல் (நீர் அகற்றிய பின்)

அறுவடை

நடுகை செய்து 8-12 மாதங்களின் பின் இலைகளை அறுவடை செய்யலாம். 50m2 பரப்பில் 2000-2500kgs அளவு வேர் தண்டுகிழங்குகளை அறுவடையாக பெறலாம் மற்றும் ஒரு தடவையில் 150 கட்டு இலைகளை பெறலாம்.

Yield