விவசாயிகளின் கள நாள்-2023
களப்பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மஹாஇலுப்பள்ளம

மஹாஇலுப்பள்ளம களப்பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ,பண்ணை இயந்திரமாக்கல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து 31.07.2023 அன்று மஹாஇலுப்பள்ளம விவசாய கள வளாகத்தில் விவசாயப் பணிப்பாளர் நாயகம் செல்வி.மாலதி தலைமையில் விவசாயிகளின் கள நாளினை ஏற்பாடு செய்தன.இதில் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் , மற்றும் அரச,தனியார் நிறுவனங்கள் ,விவசாயம் பயிலும் மாணவர்கள் ,பாடசாலைகள் ,ஏனைய கல்வி நிலையங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு விவசாயத்துறையில் சமீபத்திய ஆராய்ச்சித் தகவல்கள், புதிய பயிர் வகைகள் ,விவசாயத்துறையில் உயிர்த் தொழில்நுட்பவியலின் பயன்பாடு மற்றும் கலப்பின விதை உற்பத்தி செயல்முறை குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டனர்.திணை வகைகள் உட்பட ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட புதிய பயிர்களின் பயிர்ச்செய்கை தொடர்பான செயல்விளக்கங்களைக் காண இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.மேலும் விவசாய இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் பிரதேசத்தின் வயல் நிலைமைகளுக்கு எற்ப நீர்ப்பாசன முறைகளை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.