
- முகவரி : பத்தலகொடை, இப்பகமுவ, இலங்கை.
- மின்-அஞ்சல் : rrdi@doa.gov.lk
-
தொ/பே : +94 372 258561
- தொலைநகல் : +94 372 259881
நெற்பயிர் மற்றும் அறுவடை செயன்முறைகள்
எமது நிறுவனத்தில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன
மக்களுக்காக மேற்கொள்ளப்படும் ஏனைய சேவைகள்
அண்மைய தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
பயிற்சி, தகவல்கள் பரவலாக்கம்,தொழினுட்ப இடமாற்றம்.
RRDIஇலங்கையில் நெற் பயிரை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையமாகும். இந்த நிறுவனமானது பத்தலகொடவில் (குருனாகல் மாவட்டம்) அமைந்துள்ளது. RRDIஉடன் 7 கிளை நிலையங்கள் தொடர்புபட்டுள்ளன. அவை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
நோக்கம்
நெல் விவசாயத்தின் உற்பத்தி திறன், இலாபம் மற்றும் நெல்லின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தேசிய மையமாக இருத்தல்
நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் RRDIஆனது குருணாகல் மாவட்டத்தின் பத்தலகொட, இப்பாகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. (7.53240N, 80.43400E)இதனுடன் தொடர்புடைய போம்புவெல, அம்பலாந்தோட்ட, லவுதுவ, பெந்தோட்ட சம்மாந்துறை, பரந்தன் மற்றும் முருங்கன் ஆகிய 7 கிளை ஆராய்ச்சி நிறுவனங்கள் காணப்படுகின்றது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரே பொறுப்பாகும். பத்தலகொட, போம்பு, வெல, மற்றும் அம்பலாந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு அன் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர்கள் (ஆராய்ச்சி) பொறுப்பாகும். பெந்தோட்ட, லவுதுவ, சம்மாந்துறை, பரந்தன் மற்றும் முருங்கன் ஆகிய நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அன் நிறுவனங்களுக்கு பொறுப்பான உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) பொறுப்பாகும்.
இந்த நிறுவனம் புதிய உயர் விளைச்சலைத் தரும் நெல் வர்க்கங்களை வெளியீடுவதன் மூலமும் நெல் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும் நாட்டின் நெல் உற்பத்தித் துறையில் பெரும் பங்காற்றி வருகின்றது. RRDI ல் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டமானது அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி செலவை குறைப்பதுடன் அரிசியின் தரத்தை இயற்கை விவசாயத் துறையில் மேம்படுத்தி தற்போதய 4.3 ton/ha எனும் விளைச்சலில் இருந்து 5 ton/haஎனும் விளைச்சலையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
நெல் விளைச்சலில் ஒரு பாரிய நிலைமாற்றத்தை அடையும் முயற்சியை நெல் இனப்பெருக்க திட்டங்கள் மூலம் அடைய புதிய அபிவிருத்திசெய்யப்பட்ட குறைந்த மட்டம் பெயர்தலை உடைய உறுதியான கோரைத் தண்டு அதிக கதிர்களை கொண்ட நிரம்பிய மணிகளை கொண்ட தாவரத்தை உருவாக்குவதாகும். பாரம்பரியமற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களை இனப்பெருக்க திட்டத்தின் போது நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமானது பயன்படுத்துகின்றது.
நெற் பயிர்களின் ஊட்டச்சத்து பயன்பாட்டு திறனை அதிகரிக்க உதவும் நுட்பங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றது. நாட்டின் சேதன பயிர்ச் செய்கை கருத்தின் அடிப்படையில் தேவையான உரங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றி பரிசோதிக்கப்படுகின்றன. இது பயன்படுத்தும் உள்ளீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உற்பத்தி செலவை குறைக்கவும் உதவுகின்றது. மேலும் உற்பத்தி செலவை குறைப்பதற்கான வேறுபட்ட விவசாய நடைமுறைகள் பற்றியும் பரிசோதிக்கப்படுகின்றன.
RRDI ஆனது அரிசியில் தன்நிறைவை அடைவதற்காகவே பாடுபடுகின்றது. உயர் தரமான அதிக அறுவடையை பெறுவதற்கான தொழிநுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் நிறுவனமானது இந்த இலக்கை அடைய முயற்சிக்கின்றது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த நெல்வயல் நிலங்களில் DOAயின் சாதனையின் மூலம் அரிசி உற்பத்தியில் 10 மடங்கு அதிகரிப்பையும் சராசரி விளைச்சலில் 5 1/2 மடங்கு அதிகரிப்பையும் காட்டியுள்ளது. இந்த ஒர் அலகிற்கான விளைச்சல் அதிகரிப்பு பாரிய அளவில் உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வழியமைத்துள்ளது.
தற்போது நாட்டில் நுகர்வுக்கு தேவையான அளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றது இருப்பினும் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய எதிர் காலத்தில் அதிக உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். பல உயிரியல் மற்றும் சமூக காரணிகள் உற்பத்தித்திறனை கட்டுப்படுத்துவதனால் இது ஒரு தொடரான சவாலாக உள்ளது. மேலும் RRDI நிறுவனமானது குறைந்த நிலம், உழைப்பு, நீர் மற்றும் வளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுடன் நெல் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எனவே RRDIஇல் இன மேம்பாடு மண்வளம் மற்றும் அதன் நிலைத்தன்மை, பூச்சி, நோய் மற்றும் களை முகாமைத்துவம் அறுவடைக்கு பிந்திய தானியத்தின் தரம் மற்றும் உற்பத்தி தொழிநுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள படுகின்றது.
வரலாறு history
பத்தலகொட ஆனது குருணாகல் மாவட்டத்தின் கிரியால, ஹத்பத்துவ்வில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். பத்தலகொட கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் வழங்கும் பழங்கால நீர் பாசன குளமானது 80 களின் பிற்பகுதியில் பாள் அடைந்த நிலையில் இருந்த்து. 1902ம் ஆண்டு பொறியியலாளராள திரு. பார்கர் என்பவரால் மேம்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சிறுபோகம் மற்றும் பெரும் போகங்களில் நீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்செய்கை மேற்கொள்ள படுகின்றது.
தற்போது RRDI அமைந்துள்ள இடமானது திரு. Hamidu Muhandira என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலத்தை அரசு 1929 இல் பெற்று விவசாய திணைக்களத்திற்கு வழங்கியது. இது வாரியபொல பண்ணையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. இன்நேரத்தில் மகாஇலுப்பள்ளமையில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் நெல் ஆராய்ச்சி மற்றும் இன அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிலையான நீர் பாசனம் இல்லாதனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட நெல் ஆய்வுகள் பல சிரமங்களை எதிர் கொண்டன. இக் காலத்தில் விவசாய திணைகளத்தின் தாவரவியல் நிபுணராக இருந்த Dr. Abeyrathneநெல்ஆராய்ச்சி திட்டத்தை மகாஇலுப்பள்ளமையில் இருந்து பத்தலகொட பண்ணையிக்கு மாற்ற தீர்மானித்தார். அதன்படி மகாஇலுப்பள்ளமையில் நெல் ஆராய்ச்சியை மேற்கொண்ட Mr. Hector Weerarathne பத்தலகொடயிற்கு மாற்றப்பட்டு பத்தலகொட பண்ணையில் ஆராய்ச்சி நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கெளரவ டீ.எஸ்.சேநானாயக்க அவர்கள் பத்தலகொட பண்ணையில் மேற்கொள்ளும் பணியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதுடன் பண்ணைக்கு தடையின்றி நீர் விநியோகிப்பதிலும் கவனம் செலுத்தினார். இதனால் பத்தலகொட குளத்தில் இருந்து தண்ணீர் வளங்கவும் குளத்தின் நீர் மட்டம் 3 அடியை எட்டியதும் குளத்தில் இருந்து பத்தலகொட பண்ணைக்கு மட்டும் நீர் வளங்க நீர்பாசன துறைக்கு உத்தரவிட்டார். தற்போதும் நீர் பாசண திணைகளத்தினால் இது பின்பற்ற படுகிறது.
1952ல் பத்தலகொட பண்ணை மத்திய நெல் இனப்பெருக்க மையம் (CRBC) என பெயரிடப்பட்டது. அம்பலாந்தோட்ட, பெந்தோட்ட, போம்புவெல, லபுதுவ, சம்மாந்துறை, பரந்தன் மற்றும் முருங்கன் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையங்களை இணைப்பதன் மூலம் இது மேலும் பலப்படுத்தப்பட்டது. 1993ல் CRBCஆனதுநெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.
தொடக்கத்தில் பண்ணை கட்டிடம் மட்டுமே இருந்தது. 1982ல் RRDI இன் ஆராய்ச்சி செயற்பாடுகளை எளிதாக்க ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அத்துடன்2009ல் 70 நபர்கள் தங்கும் விடுதி வசதியும், பயிற்சி மையமும் கட்டப்பட்டது. 2016ல் விவசாயிகளுக்கு தரமான சேவையை வழங்குவதற்காக RRDI யில் ஒரு புதிய நிர்வாக மற்றும் ஆராய்ச்சி கட்டிடவளாகம் நிறுவப்பட்டது.
RRDI க்குள் உள்ள பல்வேறு மற்றும் செயற்பாட்டு பிரிவுகள் பின்வருமாறு
RRDI யின் கீழ் 7 துணை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன
விவசாய அமைச்சு
இலங்கை விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான சபை (CARP)
அரசாங்க தகவல் நிலையம்
மேலதிக இணைப்புக்களுக்காக…
முகவரி : நெல் ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையம், பத்தலகொடை, இப்பகமுவ, இலங்கை.
மின்-அஞ்சல் : rrdi@doa.gov.lk
தொ/பே : +94 372 258561
தொலைநகல் : +94 372 259881
திங்கள் முதல் வெள்ளி வரை – காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ( சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)
081- 2388331 / 32/ 34
info@doa.gov.lk
Department of Agriculture, P.O.Box. 01, Peradeniya
இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால் அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.