வயலில் இலைகள் மஞ்சளாதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து தெரிவிக்கப்பட்ட நெற் செய்கையில் இலைகள் மஞ்சளாதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல், இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் 2023.01.22 திகதி விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயத் திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் விவசாய திணைக்களத்தில் தற்போது பணிபுரியும் மற்றும் கடந்த கால நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விவசாய அமைச்சினை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், மகாவலி அதிகார சபை, கமநல சேவை திணைக்களம், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

நாட்டின் அரிசி செய்கையின் தற்போதைய நிலை பற்றி நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி ஜயந்த சேனாநாயக்க விளக்கினார் இப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து எதிர்வரும் 2023ம் ஆண்டின் சிறுபோகத்தில் வெற்றியடைவதற்கான திட்டம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வையும் பயிற்சியையும் வலுப்படுத்துவதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.