- E
உங்கள் நெற் செய்கையில்
- இலைகள் சிதைக்கப்பட்டவாறான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா?
- இலை மேல் வெந்நிற சிறிய முட்டைகளை கூட்டாக காணமுடிகிறதா?
- கருப்புநிற தலையுடனான பச்சை நிற சிறிய புழுக்கள், இலையில் கூட்டாக உள்ளனவா?
அப்படியாயின், படைப்புழு உட்பட புழு தாக்கத்தின் ஆரம்ப கட்டமாகும்.
உடனடியாக எச்சரிக்கையுடன் இருங்கள்.... இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள்
- 02, 03 வாரங்களில் இருந்து தொடர்ச்சியாக வயலை சோதிக்கவும்.
- வயலில் இரைக்கௌவி பறவைகளை கவருவதற்காக தங்குமிடங்களை தயாரிக்கவும்.
- வயலில் தாக்கம் ஏற்படும் போது தொடர்ச்சியாக நீர் நிரப்பவும்.
- புழுவின் விரைவான பரவலை கட்டுப்படுத்த வயலை சுற்றி ஆழமற்ற காண்களை
வெட்டுங்கள். இல்லையேல் வயலை சூழ சாம்பல் இடவும். - எப்போதும் வயல் களைகளற்று இருக்க வேண்டும்.
- குறைந்தளவான குடித்தொகை அடர்த்தி காணப்படுமானால் முடிந்தவரை கையால்
பிடித்து அழிக்கவும். - தாக்கம் அதிகமாக காணப்படுமானால் இரசாயன கட்டுப்பாட்டு முறையை செய்யவும். அதற்கு பரிந்துரைக்கப்பட்ட பீடைநாசினிகளை பயன்படுத்தவும்.
- ஸ்பினிடோரன் (Spinetoran) 25% WG – 16 லீற்றர் நீருக்கு 50 கிராம் இடல்
- எமமெக்டின் பென்சோயேட் (Emamectin benzoate) 5% SG – 16 – 16 லீற்றர் நீருக்கு 06 கிராம் இடல்
- குளோரன்திரனிலிபுளோரல் (chloratraniliprole) 200 கிராம் ஃ லீற்றர் SC – 16 லீற்றர் நீருக்கு 05 கிராம்
- புளுபென்டியமைட் (Flubendiamide) 24% WG – 16 லீற்றர் நீருக்கு 2.5 கிராம்
- குளோரன்திரனிலிபுளோரல் (Chlorantraniliprole) 20% உடன் தியமெத்தொஸாம் (Thiamethoxam) 20% WG கலவையை 16 லீற்றர் நீருக்கு 05 கிராம் இடல்
- டெபுபெனொசைட் (Tubefenozide) 200 கிராம் /லீற்றர் SC – 16 லீற்றர் நீருக்கு 32 மில்லி லீற்றர் இடல்
இந்த பீடைநாசினியை சரியான அளவில் மாலை நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் (ஹெக்டேயருக்கு 25 தாங்கிகள்) பூச்சியின் 4வது குடம்பி அவத்தைக்கு முன் தெளித்து வெற்றிகரமாக பீடை கட்டுப்பாட்டை செய்யலாம்.
வீடியோ நிகழ்ச்சிகளை இங்கே காணவும்
வீடியோ தொகுப்பு
நெற் செய்கையில் படைப்புழு தாக்கம் பற்றி தெரிந்துகொள்ள