குண்டசாலை விவசாய கல்லூரியின் 75ம் ஆண்டு விழா
இந்த வருடம் இலங்கை விவசாய கல்லூரியின் 75ம் ஆண்டு நிறைவை குறிக்கிறது. அதற்காக விவசாய கல்லூரியின் ஊழியர்கள், விவசாய திணைகளத்தின் விரிவாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு மற்றும் விவசாய திணைக்களத்துடன் இணைந்து குண்டசாலை விவசாய கல்லூரியின் பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் பெறுமையுடன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
75வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாகவே பின்வரும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
- 2023ம் வருட தொடக்கத்தில், ஜனவரி மாதத்தில் பிரித் சஜ்ஜாயனா நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் விவசாய அறிவு அளவீட்டு போட்டியை நடத்துதல்
- பாடசாலைகளுக்கிடையிலான கிரிகெட் போட்டியை நடாத்துதல்
- இரத்த தான முகாம்களை அமைத்தல்
- 2023 ஆகஸ்ட் மாதத்தின் 4ம், 5ம் மற்றும் 6ம் வாரத்தில் 75வது ஆண்டு விழாவுடன் தொடர்புடைய விவசாய தொழில்நுட்ப கண்காட்சியை ஏற்பாடு செய்தல். இக் கண்காட்சி 03 நாட்கள் நடைபெற உள்ளதுடன் அந்த 03 நாட்களில் பின்வரும் வேலைத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும்.
- அண்மையிலுள்ள விவசாயிகள், விவசாய கற்கைநெறியை பயிலும் மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக 03 நாட்கள் விவசாய தொழில்நுட்ப கண்காட்சியை நடாத்துதல்.
- அண்மையிலுள்ள விவசாயிகளுக்காக விவசாய பயிர் சிகிச்சையகங்களை நடத்துதல்
- உள்ளூர் உணவு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல்
- விதைகள், தாவரங்கள் மற்றும் விவசாய உபகரண விற்பனைக்கான பொது மற்றும் தனியார் துறை கண்காட்சி சாவடிகளை நடத்துதல்
- விவசாய அறிவை வழங்குவதற்காக மாணவர்களால் வீதி நாடகங்ளை ஏற்பாடு செய்தல்.
- விவாசய கல்லூரியில் சேவை செய்த உத்தியோகத்தர்களுக்கான பாராட்டு
- உள்ளூர் வைத்திய சிகிச்சையங்களை ஏற்பாடு செய்தல்