- முகவரி: தபால் பெட்டி 03, விதை சான்றிதழ் சேவை, கன்னோருவ, பேராதனை
- மின்னஞ்சல் : scs@doa.gov.lk
- தொலைபேசி: +94 81 2388217
- தொலைநகல்: +94 81 2388217
TP : +94 812 388217 E-Mail : scs@doa.gov.lk
SCPPC உப அலகுகள்
விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை
விவசாயத் திணைக்களத்தின் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையானது நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் 1979 இல் நிறுவப்பட்ட போதும் விவசாயத் திணைக்களம், 1958 ஆம் ஆண்டு முதல் விதைப் பரிசோதனை சேவையை வழங்கியது. அந்த ஆண்டில் 1758 விதை நெல் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. 1970 ஆம் ஆண்டு பேராதனையில் வருடாந்தம் 5000 மாதிரிகளை எடுக்க கூடியவாறான கொள்ளவை கொண்டதாக விதைப் பரிசோதனைக்கூடம் நிறுவப்பட்டது.
முதலாவது களப்பரிசோதனையும் (நெல்) அத்தாட்சிப்படுத்தும் செயற்பாடும் 1980 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவையானது 1983 இல் மறுவயற் பயிர்களுக்கும், 1984 இல் மரக்கறிப் பயிர்களுக்கும் 1986 இல் உருளைக்கிழங்குக்கும் விரிவுபடுத்தப்பட்டது. கண்ணொறுவை Pஊ1, கண்ணொறுவை Pஊ2, மகாஇலுப்பள்ளம, பட்டஅத்த, கரடியனாறு மற்றும் சீதாஎலிய ஆகிய ஆறு பிரதேசங்களில்; இந்த பயிர்களின் பிற்கட்டுப்பாட்டு சோதனை பரவலாக ஆரம்பிக்கப்பட்டது. கள ஆய்வினை எளிதாக்குவதற்காக, விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையானது காலப்போக்கில் நாடு முழுவதும் 24 பிராந்திய அலகுகளை நிறுவியுள்ளது.
புதிய வர்க்கங்களின் வேறுபடுத்தக்கூடிய தன்மை, சீரானதன்மை மற்றும் நிலையான தன்மை (னுருளு) சோதனை 1984 ம் ஆண்டு விதை அத்தாட்சிப்படுத்தும் சேவையால் மேற்கொள்ளப்பட்டது. பட்டஅத்த மற்றும் கரடியனாறுக்கான புதிய பிற்கட்டுப்பாட்டு அலகு 2015 ல் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பிற்கட்டுப்பாட்டு செயற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இலக்கு
தரமான விதை மற்றும் நடுகைப் பொருட்களை தேவையான அளவில் கிடைக்கச் செய்தல். விதை நடுகைப்பொருட்களின் பிறப்புரிமைத் தூய்மை, பௌதீகத் தூய்மையை பாதுகாத்தல்
நிகழ்ச்சித் திட்டங்கள்
- விதை நெல்லை அத்தாட்சிப்படுத்தல்.
- மரக்கறிப்பயிர் விதைகளை அத்தாட்சிப்படுத்தல்.
- மறுவயற்பயிர் விதைகளை அத்தாட்சிப்படுத்தல்.
- விதை உருளைக்கிழங்கு அத்தாட்சிப்படுத்தல்.
- பழமர நாற்றுமேடைகளை அத்தாட்சிப்படுத்தல்.
- பழமர நாற்றுமேடையையும் பழமரத் தாய்த்தாவரங்களையும் பதிவுசெய்தல்.
- Certification of breeder seeds.
- DUS (Distinctness , Uniformity, Stability) Testing.
சேவைகள்
- 2003ம் ஆண்டில் 22ம் இலக்க விதைச் சட்டத்தை அமுல்படுத்தல்.
- நெல், மரக்கறி, மறுவயற்பயிர் மற்றும் உருளைக்கிழங்கின் தரமான அடிப்படை விதை மற்றும் நடுகைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முன்னர் அத்தாட்சிப்படுத்தல்.
விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் பழ தாய் தாவரங்களின் இருப்பிடம்
GPS (Global Positioning System) மூலம் இத் தாவரங்களின் இருப்பிடம் வரைபடமாக்கப்பட்டது. இலங்கையில் ஒட்டு வகை பழச் செடிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபடும் நாற்றுமேடை பணியாளர்கள் தங்கள் உரிமையாளர்கள் மூலம் தொடர்புடைய தாய் தாவரங்களில் இருந்து ஒட்டு முளை அல்லது ஒட்டுக் கட்டைகளைதொடர்பு கொண்டு பெறுவதற்கு இது உதவும். இந்த வரைபடம் மூலம் சரியான இருப்பிடத்தை வழங்கல், தாய் தாவர பதிவு இலக்கம் உள்ளிட்ட தகவல், பயிர் வர்க்கம் மற்றும் உரிமையாளரின் தகவல்கள் (பெயர், தொலைபேசி இல மற்றும் முகவரி)
Contact Us
Seed Certification Service, Gannoruwa, Peradeniya
General : +94 812 388217
General : +94 812 388217
எங்களை தொடர்பு கொள்ள
- விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை, கன்னொறுவை, பேராதனை.
- scs@doa.gov.lk/scsdoa79@gmail.com
- +94 812 388217
- +94 812 388217
- திங்கள் முதல் வெள்ளி - 8.30 மு.ப. முதல் 4.15 பி.ப (வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்)