நாட்டின் பழமையான பெரிய திணைக்களம் அதன் புதிய உத்தியோகபூர்வ வலைத்தளத்தை ஆரம்பித்தது.
இலங்கையின் பழமையானதும், பெரிய திணைக்களமான விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட உத்தியோகபூர்வ வலைத்தளத்துக்கு பதிலாக இலகுவாக இயக்கக்கூடிய அதிக வினைத்திறனான தகவல்களை பெறும் வகையில் புதிய தகவல் தொழினுட்ப உத்திகளை பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிலையத்தின் தகவல் தொழினுட்ப பிரிவிளின் தலைமையில் விவசாய திணைக்களத்தின் வேறு பிரிவுகள் தகவல் தொடர்பாடல்தொழினுட்ப அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களின் ஆதரவு மற்றும் சிரேஷ்ட விவசாய உத்தியோகத்தர்களின் வள ஆதரவை பெற்றுக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளம் 2021.10.21 திகதி விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த த சில்வா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகங்கள் பணிப்பாளர் குழு உட்பட உத்தியோகத்தர்கள் சிலர் பங்குபற்றியதுடன் விவசாய திணைக்களத்தின் சில அலுவலர்கள் ZOOM மென்பொருள் ஊடாகவும் இணைக்கப்பட்டனர்.