நிலைபேறான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2021

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நகர, நகர்சார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்கு பலனை பெற்றுத்தரும்  விவசாய அமைச்சினால் நடாத்தப்படும் நிலைபேறான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டம் – 2021 ன் ஆரம்ப தேசிய விழா 2021 நவம்பர் மாதம் 1ம் திகதி கன்னொறுவை தாவர கருமூல வள நிலையத்தில் கெளரவ விவசாய அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. இங்கு 100 விவசாய  குடும்பங்களுக்கு 7 விதை வகைகளை கொண்ட விதை பையும் விவசாய உபகரண தொகுதியும் சேதனப் பசளை பக்கட் ஒன்றும் வழங்கப்பட்டது.

அதே சமயம் நாடு பூராகவுமுள்ள 572 கமநல அபிவிருத்தி பிராந்திய அலுவலங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்துள்ளதுடன் 2012.11.04 திகதி முதல் 2012.11.07 வரை சௌபாக்கிய வீட்டுத்தோட்ட வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.