OFC, மரக்கறி மற்றும் பழப்பயிரில் அடையாளம் காணப்பட்ட துறைகளை வலுப்படுத்துவதற்காக ஒரு கருத்துதிர்ப்பு பட்டறை

OFC, மரக்கறி மற்றும் பழப்பயிரில் அடையாளம் காணப்பட்ட துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கருத்துதிர்ப்பு பட்டறையானது, இத்துறையில் ஈடுபட்டுள்ள முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கன்னொறுவை, தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைப்பெற்றது.

இலங்கை OFC, மரக்கறி மற்றும் பழத்துறையில், தற்போது நாம் குறைவான உற்பத்தி, அதிகளவான அறுவடைக்கு பிந்திய இழப்புகள், சந்தையில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் போதாமை, ஏற்றுமதி தர பற்றாகுறை போன்றவற்றை அனுபவிக்கின்றோம். இந் நிலையை கருத்திற் கொண்டு, இத் துறை சார்ந்த  ஆராய்ச்சி, விரிவாக்கல், விதை மற்றும் நடுகைப் பொருள் உற்பத்தி சந்தைப்படுத்தல் மற்றும் பொருளாதார அம்சங்களை அபிவிருத்தி செய்ய மற்றும் வலுப்படுத்துவதை இப் பட்டறையின் முக்கிய நோக்கமாக கொண்டு உணவு பாதுகாப்பை உறுதிபடுத்துவதன் மூலம் இத் துறையை மேம்படுத்தும் உத்திகளை வகுக்க மற்றும் இருக்கும் சவால்களை கண்டறிய இத்துறையின் நிலைமையை பகுப்பாய்வு செய்வது குறித்த காலத்தின் தேவையாகும்..