பசுமை விவசாயத்திற்கான போசணை வழங்கல் பற்றி விவசாய பணிப்பாளர் நாயகம் தனது கருத்தை கூறினார்

தாவர வளர்ச்சி மற்றும் இறுதி உற்பத்தியை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு அவசியமான பிரதான தாவர போசணை ​பொருட்களான நைதரசனம், பொஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தேவையான நுண் போசணை மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இங்கு பொட்டாசியம் தேவையானது பொட்டாசியம் குளோரைட் கனிமமாகவும், நைதரசன் தேவை திரவ பசளையாகவும் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நெற் பயிர்ச்செய்கையில் பொஸ்பரஸ் தேவையை பொருத்தவரை தற்போது மண்ணில் இருக்கும் பொஸ்பரஸின் அளவு போதுமெனவும் அவ்வாறு இல்லாவிடின் மண் பரிசோதனை குறிகாட்டி மூலம் மண்ணை பரிசோதித்து தேவையான பொஸ்பரஸ்  அளவை வழங்க வேண்டுமென விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.