75 ஆண்டுகால பணியை கொண்டாடும் வகையில் தொடக்க விழா

இலங்கை விவசாய கல்லூரிகளுள் மிகவும் பழமை வாய்ந்த  குண்டசாலை விவசாய கல்லூரியானது 1948ல் நிறுவப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவசாய துறைக்கு மனித வளமாக நடுத்தர மட்ட தொழில்நுட்பவியலாளர்களை உற்பத்தி செய்யும் மகத்துவமிக்க வேலையை செய்வதில் 2023ம் ஆண்டுடன் தனது 75ம் ஆண்டை நிறைவு செய்கிறது.

75ம் ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 27.01.2023 அன்று பிக்குகளுக்கு அன்னதான வழங்களுடன் இரவு முழுவதுமான பிரித் சஜ்ஜாயன இடம்பெற்றது. விவசாய கல்லூரியின் பழைய மாணவ குழுவினர் சார்பின் 79/81 மாணவகுழு இந்த  அன்னதானத்தை வழங்கினர். இந்த விழாவில் 75ம் ஆண்டு கால விவசாய கல்லூரியின் பணியில் பங்களிப்பு செலுத்திய அனைத்து அதிபர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசார ஊழியர்களும் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான விவசாய திணைக்கள அதிகாரிகள், விரிவாக்கல் மற்றும் பயிற்சி பிரிவின் பணிப்பாளர் திரு. ஜகத் சுதசிங்க உட்பட பழைய மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.