24ம் வருடாந்த மாநாடு (Symposium) விவசாயத் திணைக்களம் ASDA 2022

விவசாயத் திணைக்களத்தின் 24ம் வருடாந்த விவசாய மாநாடு 23.09.2022 அன்று கன்னொறுவை தாவர மரபியல் வள நிலையம் மற்றும் தேசிய தகவல் தொடர்பாடல் நிலையம் ஆகியவற்றில் கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

விவசாய திணைக்களத்தின் பல்வேறு புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பற்றி முன்வைக்கப்பட்டது. சிறந்த விவசாயி, சிறந்த விஞ்ஞானி, நம்பிகைக்குரிய விவசாயி, நம்பிகைக்குரிய விஞ்ஞானி சிறந்த ஆய்வுக்கட்டுரை ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திரு.கே.ஈ. கருணாதிலக என்பவருக்கு அமைச்சரினால் 2022ம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.