23ம் வருடாந்த மாநாடு (Symposium) விவசாத் திணைக்களம் ASDA 2021

23ம் விவசாய மாநாடு அன்று 17.12.2021 கன்னொறுவை தாவர மரபியல் வள நிலையம் மற்றும் தேசிய தகவல் தொடர்பாடல் நிலையம் ஆகியவற்றில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்‌ஷ, விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜெயசிங்க, விவசாய பணிப்பாளர் நாயகம் Dr. அஜந்த டி சில்வா மற்றும் விவசாய திணைக்களம், பல்கலைக் கழகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை முழுவதும் உள்ள விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் ZOOM தொழிநுட்பமூடாக கலந்து கொண்டனர். மேலும் விவசாய திணைக்களத்தின் சமுகவலைத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

விவசாய திணைக்களத்தின் பல்வேறு புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பற்றி விளங்கப்படுத்தப்பட்டதுடன் விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தினால் ASDA ற்காக உருவாக்கப்பட்ட அதிகார பூர்வமான இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த விவசாயி, சிறந்த விஞ்ஞானி, நம்பிகைக்குரிய விவசாயி, நம்பிகைக்குரிய விஞ்ஞானி சிறந்த ஆய்வுக்கட்டுரை ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திரு.கே.ஈ. கருணாதிலக என்பவருக்கு அமைச்சரினால் 2021ம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

 Click here to watch ASDA-2021 Highlights

The Annual Symposium of the Department of Agriculture (ASDA) – 2021

Click the video to watch >>  

Watch Now