1958-2023 – குண்டசாலை,இலங்கை விவசாய கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடியது.

குண்டசாலை ,இலங்கை விவசாய கல்லூரியின் 75ம் ஆண்டு விழாவானது விவசாய திணைக்களம், விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையம் மற்றும் குண்டசாலை விவசாய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது ஆண்டு விழாவிற்காக பிரித் சஜ்ஜாயனா, இரத்த தான, வேலைத்திட்டம், விவசாய கல்லூரிக்கு இடையிலான கிரிகெட் விளையாட்டு போட்டி, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவசாய அறிவு அளவீட்டு போட்டிகளை குண்டசாலை விவசாய கல்லூரியினால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் இறுதி கட்டமாக கல்வியல் மற்றும் வர்த்தக கண்காட்சியானது ஆகஸ்ட் மாதம் 04,05 மற்றும் 06ம் திகதிகளில் நடைபெற்றதுடன் இதன் தொடக்கவிழாவானது 2023.08.04ம் திகதி நடைபெற்றது.

தொடக்க விழாவிற்கான பிரதம அதிதிகளாக விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி .பி.மாலதி அவர்களின் அழைப்பிற்கிணங்க மதிப்பிற்குரிய விவசாய அமைச்சர் திரு மஹிந்த அமரவீர, விலங்குபாலன மாநில அமைச்சர் திரு. டி.பி.ஹேரத் மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்கள் பங்கேற்றனர். இந்த முக்கிய நிகழ்வில், விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி. பி. மாலதி, விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், தலைமை நிதி அமைச்சர், பணிப்பாளர்கள், மேலதிக பணிப்பாளர்கள் மற்றும் விவசாய திணைக்களத்தின் பெரிய எண்ணிக்கையிலான அதிகாரிகள், ஏனைய திணைக்களங்கள், தனியார் துறைகள் பங்களித்ததுடன் குண்டசாலை விவசாய கல்லூரி ஆதி வித்யார்தீன கழக அங்கத்தினரும் பங்கேற்றனர்.

மதிப்புக்குரிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் வரவேற்பின் பின்னர், 75வது ஆண்டு நினைவு பலகை திறக்கப்பட்ட பின் மதிப்பிற்குரிய அமைச்சர் உட்பட விருந்தினர்கள் கண்காட்சி தளத்தை பார்வையிட சென்றனர். விவசாய கற்கையில் ஒரு முன்னனி நிறுவனமான குண்டசாலை விவசாய கல்லூரியானது விவசாயிகள், விவசாய கற்கைநெறிகளை கற்கும் மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான விவசாயம் சார் கல்வியின் அறிவு மற்றும் தொழில்நுட்ப தேவையை மேம்படுத்த வெவ்வேறு கண்காட்சி தளங்களையும் சாவடிகளையும் கண்காட்சி மைதானம் முழுவதிலும் அமைத்திருந்தது. 

அத்துடன், வெவ்வேறு விவசாய உற்பத்திகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள், உயர்தர தாவரங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களின் விழிப்புணர்வு வர்த்தக கண்காட்சி சாவடிகளை அமைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டு மைதானத்தில் தயாரிக்கப்பட்ட விசேட பார்வையாளர் அரங்கத்தில் இடம்பெற்ற திறப்புவிழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் 75ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விவசாய கல்லூரிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டி மற்றும் கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவசாய அறிவு அளவீட்டுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு மதிப்பிற்குரிய விவசாய அமைச்சரால் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் விசேட நிகழ்வாக விவசாய துறைக்காக ஆயிரக்கணக்கான டிப்ளோமாதாரிகளை உருவாக்குவதற்கு மிகுந்த அர்பணிப்புடன் செயற்பட்ட அதிபர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

“விவசாய கல்லூரிகளில் இருந்து நாளைக்கான தொழில்நுட்பம்” என்ற தொனிப்பொருளில் 03 நாட்கள் நடைபெற்ற இந்த கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை காண விவசாயிகள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஏனைய விவசாய கற்கைநெறிகளை பயிலும் மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.