ஷெப் மன்றம் 2024

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் (JICA) ஒத்துழைப்புடன் விவசாய திணைக்களத்தினால் செயல்படுத்தப்பட்ட JICA SHEP & SSC செயல்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட SHEP மன்றம், டிசம்பர் 18, 2024 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மன்றம் நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் மற்றும் SHEP அணுகுமுறையின் பலன்கள், SHEP அணுகுமுறையை எவ்வாறு நிறுவனமயமாக்குவது மற்றும் மாவட்டங்கள் முழுவதும் உள்ள கள நிலை அலுவலர்களிடையே SHEP வலையமைப்பை நிறுவுவது பற்றி கலந்தாலோசிக்கவும் ஒரு தளமாக காணப்பட்டது. இந்த மன்றமானது JICA மற்றும் DoA க்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது, மேலும் SHEP அணுகுமுறையானது இலங்கையின் விவசாயத்தை நிலையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை உறுதிப்படுத்தியது.