விவசாயிகள் கள நாள்
2023 ஜூலை மாதம் 21ம் திகதி பல்வெஹெர அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் நடைபெற்றது. பயிர் பராமரிப்பு, விதை உற்பத்தி கொள்கைகள் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்புடைய விவசாயிகள், விவசாய கற்கைநெறியில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப (விவசாயம்) அதிகாரிகளுக்கு அறிவை வழங்கல் மற்றும் செயல்விளக்கங்களை வழங்கல் இதன் முக்கிய குறிக்கோளாகும்.
இந்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய கல்லூரி மாணவர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் விவசாயம் சார் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல விவசாயிகள் பங்கேற்றனர்.
அங்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
மரக்கறிகள், பழங்கள் மற்றும் மேலதிக உணவு பயிர்களின் நடுகைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு தொடர்பான செய்முறை பயிற்சிகளை மற்றும் செயல்விளக்கங்களை முன்னெடுத்தல்.
மரக்கறிகள் மற்றும் மேலதிக உணவு பயிர்களின் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய நடவடிக்கைகள் தொடர்பான தொழில்நுட்ப அறிவை வழங்கல்.
நீர்பாசனம் மற்றும் ஏனைய கள நடவடிக்கைகளுக்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திரமயமாக்கல் தொடர்பான செயல்விளக்கங்களை நடத்துதல்.
பப்பாளி கலப்பின விதை உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான செய்முறை செயல்விளக்கங்களை நடத்துதல்.
மேலும், விவசாயிகள் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குதல். கள தினத்தின் விஷேட நிகழ்வுகளாக, விதை உற்பத்தியில் பங்களிப்பு செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு அதில் பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் விதை உற்பத்தி பண்ணைகளில் மாணவர்கள் இணைந்து செய்முறை பயிற்சி பெற வாய்ப்பளித்தல்.