விவசாயத் திணைக்களத்தின் கள நாளை நடத்துதல் 2023.07.26
பொலன்னறுவை விதை உற்பத்தி பண்ணையின் கள நாள்
நோக்கம்
இந்த கள நாள் பின்வரும் 3 நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடாத்தப்படுகிறது.
- பொலன்னறுவை பண்ணையில் பெறப்பட்ட கள மற்றும் முகாமைத்துவ அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்தல்.
- அத்திவார விதை உற்பத்தி தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்
- உள்ளூர் விவசாயத்திற்கு பொலன்னறுவை விதை உற்பத்திப் பண்ணையின் பங்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்.
பின்வரும் விடயங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டல்.
- தாவர நாற்றுமேடை – தாவர ஒட்டு செய்தல் ,மண் கலவைகளை தயாரித்தல், தாவர பராமரிப்பு போன்ற விடயங்கள்.
- மறுவயற் பயிர்ச்செய்கை – மறுவயற்பயிர் வர்க்கங்கள், வர்க்கங்களின் பண்புகள் மற்றும் விதை உற்பத்தியில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய விடயங்களை முன்வைத்தல்.
- மரக்கறிச்செய்கை – வெண்டிக்காய், வெள்ளரிக்காய், கத்தரி விதை உற்பத்தி தொடர்பான விடயங்களை முன்வைத்தல்
- சேதனப்பசளை உற்பத்தி – சேதனப்பசளை உற்பத்தி முறைகள் தொடர்பான செயன்முறை விளக்கம், பயன்படுத்தப்படும் உபகரணங்களை அறிமுகப்படுத்தல்
- நெற்செய்கை – பொலன்னறுவை விதை உற்பத்தி பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அத்திவார வர்க்கங்கள் -18 மற்றும் பதிவு செய்யப்பட்ட வர்க்கங்கள் 16 தொடர்பான விடயங்களை முன்
வைத்தல். - இயந்திரவியல் பிரிவு – பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கலப்பைகள், உழவு இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், களையகற்றும்
உபகரணங்கள், விதை நெல் சேகரிப்பு இயந்திரம் போன்ற உபகரணங்களை காட்சிப்படுத்தல்.
பங்கேற்பு
- பொலன்னறுவை மாவட்டத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் விவசாய விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள்
- விதை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள்
- விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதான காரியாலயம், பிரதேச காரியாலயம் மற்றும் பண்ணைகளின் அதிகாரிகள்.
- விவசாயத்துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் பிரிவின் அதிகாரிகள்.
- விவசாயத் திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளின் அதிகாரிகள்.