உலக நீர் தினம் மற்றும் உலக வளிமண்டலவியல் தினம்- 2024
உலக நீர் தினம் மற்றும் உலக வளிமண்டலவியல் தினம் ஆகிய இரண்டையும் அங்கீகரிக்கும் வகையில் விவசாய திணைக்களத்தின் நீர் மற்றும் வானிலை துறைகளை மேற்பார்வையிடும் முதன்மை நிர்வாக மையமான இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையத்தால் ஓர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது..இந்நிகழ்வானது 2024 மார்ச் மாதம் 22 ஆம் திகதி கன்னொறுவை ,பேராதனை சேவை கால பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வானது பிரதம அதிதியான விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செல்வி.மாலதி பரசுராமன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன் வேறுபட்ட உள்ளடக்க அணுகுமுறையின் காரணமாக இந்நிகழ்வில் நீர் மற்றும் வளிமண்டலவியல் துறையில் செயற்படும் கிட்டத்தட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் முன்னிலைப்படுத்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டன..விவசாய திணைக்களத்தின் இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம்,நீர்ப்பாசனத் திணைக்களம்,நீர் வளச்சபை,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை,மகாவலி அதிகார சபை, மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.இதற்கு மேலதிகமாக பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் நுண்ணறிவுகளுடன் திட்டத்தை வளப்படுத்தும் விதமாக இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்களை உள்ளடக்கிய ஒரு தூண்டுதலான குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.