இலங்கை வயல் நிலங்களின் கனிமூலகங்களின் இட வரைப்பட வெளியீடு

இலங்கை வயல் நிலங்களின் கனிமூலகங்களின் இட வரைப்பட வெளியீட்டு நிகழ்வானது 2023, பெப்ரவரி 24ம் திகதி பேராதனை பல்கலைக்கழக, விவசாயப்பீடத்தின் மன்ற அறையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுற்கு கல்வி அமைச்சினூடாக உலக வங்கியினால் நிதியளிக்கப்பட்ட உயர் கல்வி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தியை விரைவுபடுத்தும் (AHEAD) திட்டத்தின் கீழ் இந்த இட வரைபடமானது அபிவிருத்தி செய்யப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் விவசாயத் தினைக்களத்தின் விஞ்ஞானிகள் குழுவினால் இத் திட்டத்திற்கு சம பங்களிப்பு வழங்கப்பட்டது.

இந் நாட்டின் நெற்செய்கை செய்யப்படும் தாழ்நிலங்களிலிருந்து இத்திட்டத்தினூடாக மொத்தமாக 9,067 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெற் தாவர வளர்ச்சிக்கான அத்தியாவசிய கனி மூலகங்களின் (பொஸ்பரஸ்,பொட்டாசியம், மக்னீசியம், நாகம், செப்பு, மங்கனீசு,மெலிப்தீயம், இரும்பு) மற்றும் கோபோல்ட், அலுமினியம் மற்றும் சோடியத்தின் செறிவை காண பரிசோதிக்கப்பட்டது. மேலும், நச்சு சுவட்டு மூலகங்களின் ( ஆசனிக், கட்மியம், இரசம்) செறிவுகளும் பரிசோதிக்கப்பட்டது. மண் மாதிரியில் மண் பி.எச் மற்றும் மின் கடத்துதிறன் (EC) என்பவையும் அளவிடப்பட்டன. பங்குதாரர்கள் இத் தரவுகளை பெற்றுக்கொள்வதற்காக விவசாய திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் உருவாக்கப்பட்ட இட வரைபடமானது வெளியிடப்பட்டது. கழுள்ள படிமுறையைப் பயன்படுத்தி உங்களால் வரைபடத்தை பெற்றுக்கொள்ளலாம்;

  1. ”Department of Agriculture ” வலைதளத்திற்கு செல்க, பின் “Maps” ஐ தெரிவு செய்து, அதன் கீழ் “Paddy Soil Fertility Maps”ஐ தெரிவு செய்க.
  2. இவ் ​வலைதள இணைப்பை பயன்படுத்தவும்: https://doa.gov.lk/soil-fertility-map/
  3. கூகுளில் ” மண் வள வரைபடம்” எனும் சொற்சாவியை பயன்படுத்தவும்

இலங்கை வயல் நிலங்களின் மேற்குறிப்பிட்ட கனிமூலகங்களின் இட வரைப்படங்கள், அம் மூலக விநியோகத்தின் சுருக்க புள்ளிவிபர அறிக்கை மற்றும் அபாய அளவு என்பவற்றை உங்களுக்கு அனுகமுடியும். திட்டக் குழுவான நாங்கள், உங்களை தகவல் மற்றும் தீர்மானம் காணலுக்கு இந்த தரவு தளத்தை பயன்படுத்த ஊக்குவிக்கின்றோம்.

உங்களது மேலதிக தகவல்களுக்கு, பேராசிரியர், எல்.டி.பி.சூரியகொட lalith.suriyagoda@agri.pdn.ac.lk ஐ தொடர்புகொள்ளவும்.