விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி - 2023
(கன்னொறுவை விவசாய தொழில்நுட்ப பூங்கா வளாகம்

விவசாய திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட “விவசாயிகளின் கள நாள் மற்றும் விவசாய கண்காட்சி” 2023.08.03ம் திகதி விவசாய அமைச்சர் திரு. மஹிந்த அமரவீர அவர்களின் பங்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் 2023.08.04 மற்றும் 05ம் திகதிகளில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. தொடக்கவிழாவில் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி.மாலதி உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக் கண்காட்சியின் நோக்கமானது விவசாய துறையின் ஆராய்ச்சி மூலம் வெளியிடப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள், புதிய வர்கங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகும். மேலும் விவசாய விளைபொருட்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் உட்பட 12,000க்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியை காண வந்தனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.