விவசாயத் திணைக்களங்கள்,மாகாண விவசாயத் திணைக்களங்களின் விரிவாக்கல் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளின் வெற்றிகரமான விரிவாக்கல் திட்டங்கள் / அபிவிருத்தித் திட்டங்களின் மதிப்பீடு - 2023

விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களின் விரிவாக்கல் பிரிவுகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வெற்றிகரமான விரிவாக்கல் திட்டங்களை மதிப்பிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்பீட்டு நிகழ்ச்சி 11.08.2023 அன்று தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் விவசாயப் பணிப்பாளர் நாயகம் செல்வி.P.மாலதி அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகம் ,ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந்தத் திட்டங்களின் மதிப்பீட்டில் பங்கேற்றதுடன் விரிவாக்கத் துறையைச்சேர்ந்த பெருமளவிலான அதிகாரிகள் இந்த விளக்கக் காட்சிகளை பார்வையிட வந்திருந்த்துடன் Zoom தொழினுட்பம் ஊடாகவும் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டனர்.பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான திட்டங்களின் விபரங்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. மேலும் விரிவாக்கப்பணியாளர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சிறந்த வாய்ப்பு கிடைத்தது.இத்திட்டத்தில் வெற்றி பெறும் அலுவலர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படவுள்ள சிறப்பு விழாவில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.