பழத்துறையின் பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதியை அறிமுகப்படுத்தல்

இலங்கையின் பழ பெறுமதி சங்கிலியின் ஒவ்வொரு படியிலும் பங்குதாரர்களை பதிவு செய்வதற்கான தகவல் முகாமைத்துவ தொகுதியினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி 2023.11.01 அன்று விவசாயப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகங்கள் , பணிப்பாளர் சபை,முன்னால் பணிப்பாளர்கள் மற்றும் பழத்துறையுடன் தொடர்புடைய பங்குதாரர்கள்  கலந்து கொண்டதுடன் அதிகாரிகள்  மற்றும்  பங்குதாரர்களின் குழு zoom தொழினுட்பத்தின் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டது.

பழத்துறையின் பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதியில் பதிவு செய்வதற்கு >>

https://fruitstakeholders.doa.gov.lk/ 

இதற்காக பதிவு செய்யும் வசதி விவசாயத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.