தேசிய மர நடுகை விழா

தேசிய மர நடுகை விழாவானது, விவசாய அமைச்சினால் (2023/04/20) அன்று சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் இறுதி மங்கள நிகழ்வாக இடம்பெற்றது. விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வேலைத்திட்டத்துடன், விவசாய திணைக்களம் மற்றும் அதன் உப பிரிவுகளும் தமது அலுவலக வளாகத்தில் நடுகை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

கன்னொறுவை விவசாய திணைகளத்தின் சேவை பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற மர நடுகை நிகழ்ச்சிக்கு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், செல்வி.மாலதி மற்றும் ஏனைய விவசாய திணைகள அதிகாரிகளும் பங்குபற்றினர்.