தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விவசாயத்தை புத்துயிர்ப்பாக்க விவசாய திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை மற்றும் உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இறக்குமதி மற்றும் பாவனைத் தடை விதிக்கும் தீர்மானமானது நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலான அமைந்துள்ளது.

இந் நிலையை போக்க, பிரதான உணவுப் பயிர் உற்பத்தி தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீண்டகால ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் குறுகிய கால, இடைகால, நீண்ட கால தீர்வுகள் அடங்கிய பிரேரணை ஒன்று விவசாய அமைச்சின் செயலாளர்,விவசாய பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் விவசாய திணைக்களத்தின் அனைத்து பணிப்பாளர்களின் பங்கேற்புடன் 28.06.2022ல் விவசாய அமைச்சில் விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் விவசாயத் துறையின் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பு மற்றும் அர்பணிப்புடன் அந்த முன்மொழிவுகளை திறம்பட செயல்படுத்த முடியும் என்று வலியுறுத்தப்பட்டது.