இலங்கையில் GAP திட்டத்தினுல் உள்நுழைய பங்குதாரர்கள் கருத்துக்களம் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழியை உருவாக்குதல்

பசுமை விவசாயத்தின் அரசாங்ககொள்கையை அமுழ்படுத்தும் போது (சிறந்த விவசாய நடைமுறைகள்) திட்டத்தை செயற்படுத்துவதற்கான பங்குதாரர் மன்றம் 11.11.2021 அன்று தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையம் கன்னொறுவை கேட்போர் கூடத்தில் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.

விவசாய பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜந்த டி சில்வா முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம் Dr.W.M.W. வீரக்கோன், மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி) ஜெயந்த இலங்கோன், விவசாய திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள், அரச சார்புற்ற நிறுவன உறுப்பினர்கள் விவசாயிகள் குழு, வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.