இலங்கையின் நெற்துறையை மையமாகக் கொண்ட ஒரு குழு கருத்துதிர்ப்பு பட்டறை

விவசாய திணைக்களத்தால் ஒருங்கமைக்கப்பட்ட ”இலங்கையின் நெற் துறை” தொடர்பாக கவனம் செலுத்தப்பட்ட குழு கருத்துதிர்ப்பு பட்டறையானது 20.02.2023 அன்று NAICC கேட்போர் கூடத்தில் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம்கள், பல்கலைக்கழக கல்விமான்கள் பிரபல விஞ்ஞானிகள், விவசாய திணைக்கத்தின் மூத்த அலுவலர்கள் மற்றும் விவசாயம் தொடர்பான ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அங்கத்தவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வரவேற்பு உரையானது மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் (அபிவிருத்தி) வழங்கப்பட்டதோடு தொடக்க கருத்துக்கள் விவசாய பணிப்பாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய நிலை, பிரச்சினைகள் மற்றும் விவசாய துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து நான்கு முன்னிலைப்படுத்துகைகள் கலாநிதி சமில சந்திரசிறி (சமூக பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் மையம்), கலாநிதி ஜயந்த சேனாநாயக்க – பணிப்பாளர் (RRDI), திரு. ஜகத் சுதசிங்க – பணிப்பாளர் (ETC), திரு. சதிக்ஷ்வரன் – பணிப்பாளர் (SPMDC) ஆகியோரால் வழங்கப்பட்டது.

இந்த பட்டறையின் பிந்தைய அமர்வில் மதிப்புக்குரிய விவசாய அமைச்சர் திரு மஹிந்த அமரவீரவும் கலந்து கொண்டார்

இலங்கையின் நெற் துறையில் நாம் தற்போது விவசாயிகளின் வயல்களில் குறிப்பிடத்தக்க விளைச்சல் இடைவெளியை அனுபவிப்பதோடு சந்தைப்படுத்தலில் கணிசமான சிக்கலையும் எதிர் கொள்கிறோம். நெற் துறையின் தற்போதைய நிலையை பகுப்பாய்வது முறையே இருக்கும் சவால்களை இனங்கான மற்றும் துறையின் அபிவிருத்திக்கான மூலோபாயத்தை வகுப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய சரியான நேரத்தில் தேவைப்பட்டது. ஆகையால், இந்த பட்டறையின் பிரதான குறிக்கோளானது இலங்கையின் விவசாய துறைக்கான 03 / 05 / 10 வருட செயற்றிட்டத்தை வகுப்பது ஆகும். அத்துடன், ஒவ்வொரு துறைக்கும் அடுத்த ஐந்து வருட காலத்துக்கான உற்பத்தி இலக்கை அமைத்தல், தேசிய நெல் உற்பத்திக்கான குறுகியகால மற்றும் நடுத்தர கால கொள்கை வழிகாட்டி அபிவிருத்தி, நெற் துறைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சிகளின் அபிவிருத்தி மற்றும் குறுகிய கால மற்றும் நீண்டகாலத்திற்கான ஒரு செயற்திட்டத்தை இனங்காணல் என்பன இந் நிகழ்ச்சியின் ஏனைய குறிக்கோள்களாகும்.