Telephone
081- 2388331 / 32/ 34
Email Address
info@doa.gov.lk
Office Address
Department of Agriculture, P.O.Box. 01, Peradeniya
இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால் அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.
திட்டங்கள்
மேம்படுத்தப்பட்ட தகவல் முகாமைத்துவம் மற்றும் களப்பயன்பாடு மூலம் வனம் சார்ந்த பயிர்களை உள்ளக பாதுகாப்பு என அழைக்கப்படும் பல நாட்டுத் திட்டமானது 2004ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சுடன் இணைத்து இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச பங்களார்கள் மூலம் தொடங்கப்பட்டது. இலங்கை தவிர அமெரிக்கா, வொலிவியா, மடகஸ்கார் மற்றும் உசவெக்கிஸ்டான் ஆகிய நாடுகளும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இத் திட்டத்திற்கான நிதி உதவியானது உலகலாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மூலம் வழங்கப்படுகின்றது.மேலும்தேசிய தாவரவியற் பூங்கா பாதுகாப்பு (BGCT) ஐக்கியநாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உலக பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) உலக பாதுகாப்பு மேற்பார்வை மையம் (UNEP/WCMC) மற்றும் ஜெர்மன் விவசாய ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் மையம் (ZADI) என்பன மற்றைய சர்வதேச நிறுவனங்களாகும்.
வனம் சார்ந்த பயிர்களில் அவற்றிற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நெருக்கமுடைய முன்னோர் இனங்கள் அடங்கும் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் நிலையான விவசாய சூழல் அமைப்பை பேணவும் வனம் சார்ந்த பயிர்கள் முக்கியமானவை. சில வனம் சார்ந்த பயிர்கள் (PGRC) மரபணு வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான வனப் பயிர்கள் உயிர்பல்வகைமை காரணமாக அழிந்து போகும் நிலையில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் மக்கள் சனத்தொகைக்கு உணவளிக்கும் சிறந்த இனங்களை பாதுகாப்பது மிக அவசர தேவையில் ஒன்றாகும்.
மறுவயற் பயிர்களிலும் மரக்கறியிலும் இலங்கை தன்னிறைவு அடைவதற்கு இலங்கை அரசாங்கமானது ‘மஹிந்த சிந்தனை’ எதிர்காலத்திற்கான பார்வை எனும் செயற்றிட்டத்தின் மூலம் உணவு உற்பத்தி அதிகரிக்க தேசிய முன்னுரிமை வழங்கியது பொது தனியார் கூட்டு முயற்சியின் மூலம் இலங்கை அரசாங்கமானது “மஹிந்த சிந்தனை” ஒரு பிரகாசமான எதிர்காலம் 2010 மூலம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட காய்கறி விதை உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தல்செய்யப்பட்டது.
இந்த சூல் நிலையில் இலங்கை அரசாங்கமானது ஜப்பான் அரசின் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்திடம் ஒரு தொழிநுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை கோரியது. இது விவசாய உற்பத்தி திறன் மற்றம் தரம் மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதைகளை உற்பத்தி செய்து விவசாயிக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டதாகும்.
IICA இன் குடாநாட்டுத் திட்டமானது விவசாயம் மீன்பிடி மற்றும் கிராமபுற மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டமைப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய பிரச்சினைகள் குறைந்த உற்பத்தித்திறன் விவசாயிகளின் விவசாய முகாமைத்துவ தொழில்நுட்பமின்மை விவசாயப் பொருட்களின் பலவகைமைப்படுத்தல் பங்கேற்பு மேம்பாடு ஆகியவை ஆகும்.
இந்த திட்டம் விவசாய உற்பத்தித்திறன் மற்றும் விவசாயத்தின் பல்வகைப்படுத்தல் சிக்கல்கலைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் ஜப்பான் ஒத்துழைப்பு மூலோபாயத்தில் அதிக செல்லுபடியாகும்.