PPS – Home – Tamil_new

TP : +94 812 388316        E-Mail : ppsgannoruwa@yahoo.com

SCPPC Sub Units

தாவர பாதுகாப்பு சேவை

தாவர பாதுகாப்பு சேவையானது இலங்கை பேராதனை விவசாய திணைக்களத்தின் (DOA),விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையத்தின்(SCPPC) நோக்கத்தின் கீழ் வருகிறது.1999ன் தாவர பாதுகாப்பு சட்ட இல 35ஐ செயல்படுத்தல் மூலம் நாடளாவிய ரீதியில் அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அலுவலகர்கள் மற்றும் பங்குதார்ர்களை சம்பந்தப்பட்ட முன்னேற்பாடுகளுடன் நியமித்தல்,பீடை அல்லது நோய்களின் தீவிர பரவல் முகாமைத்துவம் நெல் மரக்கறி, பழங்கள், பிறகளபயிர் மற்றும் வீட்டு தோட்டத்தில் ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவ  (IPM) நிகழ்வுகளை கள மட்டத்தில் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல், அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சியுடன் விவசாய நிலங்களில் காணப்படும் நீர் களைகள் மற்றும் பிற ஆக்கிரமிப்பு தாவரங்களின் தாக்கத்தை தணித்தல், விவசாயிகளின் நிலங்களில் பீடை நாசினிகள் முக்கியமாக களைநாசினிகள் மற்றும் கறையான் நாசினிகளுக்கான உயிர் திறன் சோதனைகளை முன்னெடுத்தல், மற்றும் DOA அல்லது அரச கட்டிடங்களில் கறையான் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயற்படுத்தல் என்பன தாவர பாதுகாப்புச் சேவையின் நடவடிக்கைகளுள் அடங்குகின்றன.

bg

பணிநோக்கு

  • 1999ன் தாவர பாதுகாப்புச் சட்ட இல 35ன் விதியை ஏற்று செயற்படுத்தும் போது உள்ளூர் விவசாய சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்தும் குறைவான பாதிப்பை விளைவிக்கும் திறன்மிக்க பீடை முகாமைத்துவ உத்திகளை ஊக்குவித்தல்.
bg

குறிக்கோள்கள்

  • இலங்கையில் தாவரங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு
  • பீடை முகாமைத்துவத்தில் செயற்கை பீடை நாசினிகள் பயன்பாட்டை குறைத்தல்.
  • இலங்கையில் தேசிய தாவர பாதுகாப்பை வலுப்படுத்தல்
  • பீடை கண்காணிப்பு, எதிர்வுகூறள் மற்றும் தீவிர நோய் பரவல் முகாமைத்துவம்
  • சரியான நேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு இனங்களின் (IAS) முகாமைத்துவம்
  • திறன்மிக்க வீடு சார்ந்த பீடை முகாமைத்துவம்.
bg

சேவைகள்

  • வேண்டு கோளுக்கு இணங்க சரியான நேரத்தில் பீடை கட்டுப்பாட்டில் ஈடுபடல்,
    • தீவிர நோய் பரவலில் அவசரமாக பாரிய அளவில் பீடைநாசினி பிரயோகம்
  • நீர் சார்ந்த அந்நிய ஆக்கிரமிப்பு இனங்களை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாடு காரணிகளை அறிமுகப்படுத்தல்
    • உயிரியல் இயக்கிகளை பாரிய அளவிளான வளர்ப்பு சல்வீனியாவிற்கு Cytobagous Salviniea
    • ஆகாய தரமரைக்கு Neochetina Bruch, மற்றும் Neochetina eichhorniee
    • சல்வியா மற்றும் ஆகாயத் தாமரையின் கட்டுப்பாட்டிற்கு உயிரியல் காரணிகளை புதிய நீர் நிலைகளுக்கு அறிமுகபடுத்தல்
மேலதிக சேவைகள்
  • களைநாசினி கறையான்நாசினிக்கு முதன்மை அளவிலான சோதனை
  • DOA அல்லது அரச கட்டிடங்களில் கறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
  • சிறப்பு இடங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரப் பாதுகாப்பில் பீடை முகாமைத்துவம்
  • கண்காட்சிகள், வெகுஜன ஊடக நிகழ்ச்சிகள்
  • அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள்
  • தொட்டி மற்றும் முதன்மை அளவு சோதனைகளில் உயிரியல் காரணிகளின் அறிமுகம்
  • ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவம்
மேலும்
  • மேலும், சர்வதேச விவசாய உயிர் விஞ்ஞான மையத்துடன் ஒத்துழைப்புடன் நிரந்தர பயிர் சிகிச்சை,மைய நிகழ்ச்சி திட்டங்களை (PCCP) தாவர பாதுகாப்புச் சேவையினால் ஒழுங்கு செய்தல்.
  • PPS இனுள் உள்ளடங்கும் ஏனைய, நடவடிக்கைகள் நெல் வயல்களில் எலியின் முகாமைத்துவம், தேசிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பீடை முகாமைத்துவம் மற்றும் பங்குதாரர்களின் வலையமைப்பின் மூலம் பீடை கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஆலோசனைகளை செயல்படுத்தல் என்பனவாகும்.
  •  

எங்களை தொடர்பு கொள்ள