NAICC-Services -ICT Programs – Mobile Applications – ta

National Agriculture Information and Communication Centre

கைத்தொலைபேசி செயலிகள்

குறிஷி அட்வைசர்” கைத்தொலைபேசி செயலி இலங்கையில் உணவு பயிர்ச் செய்கைக்காக விவசாய ஆலோசனை சேவைகள் வழங்கும் அன்ரொயிட் பதிப்பாகும். “குறிஷி அட்வைசர்” என்பது ஓப்லைன் தொலைபேசி செயலியாகும். இதை மட்டுப்படுத்திய இணைய வசதி இருக்கும் போது பயன்படுத்தலாம்.

இந்த செயலி கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நெற் செய்கைக்காக பசளையை பரிந்துரை செய்யும்.


விவசாய திணைக்களத்தினால் இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவினும் நெற் செய்கை நிலத்தில் பெறப்பட்ட மண் மாதிரியை பரிசோதித்த பின் ஒவ்வொரு நெற் செய்கை நிலத்தினதும் மண் நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம அலுவர் பிரிவுக்குமான நெற் பயிர்ச் செய்கைக்கான பசளை பரிந்துரை செய்யப்படுகிறது.

பயிர்களின் கள ஸ்தாபிதம் முதல் அறுவடை வரை வரையறுக்கப்பட்ட காலவரையின் பின்னர் விளைச்சல் சந்தைக்கு கிடைப்பதுடன் பயிர் செய்யும் நில அளவிற்கு ஏற்ப விநியோகம் மற்றும் சந்தை நிலவரம் வேறுபட்டு விலை ஏற்ற இறக்கத்திற்கு காரணமாகிறது. இந்த மென்பொருளின் குறிக்கோளானது விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யவும், விலை உயர்வை குறைப்பதன் மூலம் நுகர்வோர் திருப்தியை உறுதி படுத்தவும், விவசாயிகளுக்கு இலகுவாக முடிவெடுக்க உதவுவதற்காக கள ஸ்தாபித்தல் தொடர்பான முடிவெடுக்கும் கட்டத்தில் வயல் நிலவரங்கள் மற்றும் அறுவடை கட்டத்தில் சந்தை தகவல்களை முன்னறிவித்தல் மூலம் அறிவிப்பாதகும்.

 

 

குறிஷி ரேடியோ அன்ரொயிட் செயலி இலவசமானது. உங்களுடைய தற்போதைய விருப்பமான சிங்கள பாடல்களையும் HD தரமுடைய விவசாய நிகழ்ச்சிகளையும் கேட்கலாம். குறிஷி ரேடியோவை கேட்பதற்கு உங்களுக்கு தடை இல்லாத இணையத் தொடர்பு இருக்க வேண்டும்.


இது இலங்கையின் முதல் விவசாய வானொலி நிலையம். குறிஷி ரேடியோ இலங்கை விவசாய திணைக்களத்தின் தொலைகாட்சி மற்றும் பண்ணை ஒலிபரப்பு சேவைக்கு சொந்தமானதும் அவர்களால் செயற்படுத்தப்படுவதுமாகும்.

Agri staff எனும் இலங்கை விவசாய திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் மையத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி கோவை கைத்தொலைபேசி செயலியாகும். Agri staff இல் செயற்திட்டம், ஆய்வு, மற்றும் அபிவிருத்தி எனும் துறைகளின் 4000 ற்கும் அதிகமான அலுவலர்களின் தொடர்பு கொள்ளும் தகவல்கள் உள்ளடக்கபட்டிருக்கும். இது இலங்கை விவசாய திணைக்களம் மற்றும் மாகாண விவசாய திணைக்களம் என்பவற்றின் அனைத்து அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளும் இலவசமான ஓப்லைன் தொலைபேசி செயலியாகும்.

Hela Nutrition

Hela Nutrition App

Details About App

SL gap

SL-Gap App

Details About App