- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல் : naicc@doa.gov.lk
- தொலைபேசி :+94 812 030040/ 41/ 42/ 43
- தொலைநகல் :+94 812 030048
NAICC துணை அலகுகள்
மத்திய விவசாய நூலகம்
நோக்கம்
விணைத்திறனான நூலக சேவையினையும் விவசாய திணைக்களத்தின் கானொளிகளை இலகுவாக அணுகவும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நூலக வெளியீடுகளை பாதுகாப்பதன் மூலம் விவசாய அறிவு கொண்ட சமூகத்தை உருவாக்குதல்
- விவசாயத்திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் இந்த நூலகத்தை பயன்படுத்தலாம்.
- புத்தகத்தைபெற்றுக்கொள்ளுபதற்கு தகுதியான அலுவலர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவரின் பரிந்துரையுடன் குறிப்பிட்ட விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- நூலகத்தை பயன்படுத்தும் அலுவலர்கள் தமது தேசிய அடையாள அட்டையை அல்லது திணைக்கள அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும்.
- அனைத்து வாசகர்களும் தமது பொதிகளை இறாக்கையில் வைக்க வேண்டும். நுலகத்தினுல் நுழைய முன்னர் தனது பெயரையும் விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும்.
- ஒவ்வொரு வாசகருக்கும் 30 நாட்களுக்கு மூன்று புத்தகங்கள் வழங்கப்படும். இரவல் பெற்ற புத்தகங்களை திருப்பிக் கொடுக்காத வரை மேலும் புத்தகங்கள் வழங்கப்படமாட்டாது
- சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்காத புத்தகத்திற்கு நாளொன்றுக்கு ரூபா 5 அபராதம் அறவிடப்படும் மற்றும் ஒரு மாதத்தின் பின் விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்படும்.
- பின் தொடர்ந்து வரும் காலங்களில் பதில் இல்லை எனின், புத்தகங்கள் அலுவலரின் சம்பளப்பணத்திலிருந்து தற்போதைய விலையின் 25% மும்திணைக்கள வரியும் கழிகப்படும்.
கன்னொறுவை விவசாயத் திணைக்களத்தின் மத்திய நூலகமானது இத்துறையின் மிகப் பழமையான நூலகமாக கருதப்படுகிறது. சிவேவ் வீதியில், கிவி கார்மன்ஸ் இல் 1810 இல் தாவரவியற் பூங்கா ஆரம்பிக்கப்பட்டது. விவசாயத் திணைக்களத்தில் மத்திய நூலகமும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. வெப்பமண்டல தாவரங்களைப் பற்றிய புத்தகத் தொகுப்பே நூலகத்திற்கு கிடைத்த நன்கொடையாகும். அலேக்ஸான்டர் மூன் தனது காலத்தில் அதிகளவான புத்தங்களைப் பெற்று நூலகத்தை வளர்த்த முதல் பிரித்தானிய நூலகவியளாலர்.
நூலக கூட்டுத்திட்டத்தின் விளைவாக தேயிலை இறப்பர், தென்னை ஆராய்ச்சி நூலகங்கள் போன்ற விவசாயத்துறையின் கந்தளாய் சீனி கூட்டுத்தாபன நுலகம் உள்ளபங்களாக ஏனைய பல நூலகங்கள் உருவாக்கப்பட்டன.
அச்சிடப்பட்ட தொகுப்பு | |
இரவல் தொகுப்பு | 8186 |
குறுகிய கால உசாத்துணை தொகுப்பு | 1402 |
உசாத்துணை தொகுப்பு | 581 |
திணைக்கள வெளியீட்டு தொகுப்பு | 770 |
வெளிநாட்டு தொகுப்பு | 3477 |
அரிய புத்தகத் தொகுப்பு | 599 |
வரைபட புத்தகங்கள் மற்றும் வரைபட தொகுப்பு | 150 |
நிர்வாக அறிக்கைகள் | |
வர்த்தமானி தொகுப்பு | |
ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு | 115 |
சஞ்சிகைகளின் தொகுப்பு | 50000 |
சிறப்பு தொகுப்பு |
குறுக்கோள்கள்
- நூலகத்தில் தற்போது இருக்கும் விவசாய திணைக்களத்தின் வெளியீடுகளை டிஜிடல் மயப்படுத்துவதன் மூலம் தகவல் தொழினுட்ப அடிப்படையிலான தகவல் முகாமைத்துவத்துடன் விவசாய திணைக்களத்தின் நூலகத்தை வலுப்படுத்துதல்
- தகவல் தொடர்பாடல் மையத்தின் கீழ் விவசாய திணைக்களத்தின் மத்திய தகவல் அலகை நோக்கி அனைத்து முக்கிய விவசாய தொழினுட்ப தகவல்களின் முக்கிய களஞ்சியமாக விவசாய திணைக்களத்தின் மத்திய விவசாய நூலகத்தை தரம் உயர்த்துதல்
- விவசாயத்தின் பங்குதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒன்லைக் தகவல் முறைகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்
- வினைத்திறனான தகவல்களை சேகரித்தல், செயலாக்கம் பகிர்வு பொறிமுறை (ஆலணங்கள், புள்ளிவிபர தரவுகள், மின்னணு படங்கள், காணொளிகள் முதலியன)
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்
- ஒன்லைக் டிஜிடல் நூலகத்தினால் காணொளி நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்குதொடர்புடைய விவசாய தொழினுட்பங்கள், மற்றும் தகவல்கள், விரைவாக சென்றடைவதை உறுதிசெய்தல்
பௌதீக நூலகம்
- 10900 பாடப்புத்தகங்கள 10000 ஏனைய புத்தங்கள் அடங்கிய 750000 வெளியீடுகள்
- 800 ற்கும் மேற்பட்ட சஞ்சிகை தலைப்புகளில் 40000 இற்கு மேற்பட்ட சஞ்சிகைகள் வெளியீடுகள்
- பயிராக்கவியல் மரபியல் மற்றம் தாவர இனப் பெருக்கம் மண் மற்றும் தாவரப் போசணை தாவர நோயியல், பூச்சியியல், தாவர இழைய வளர்ப்பு, மற்றும் உயிரணு வளர்ப்பு அறுவடைக்கு பிந்தைய தொழிணுட்பம் விவசாய பொருளியியல் நுண்ணுயிரியல்.
டிஜிடல் நூலகம்
- இந்த டிஜிடல் நூலகம் விரைவாக தகவலை பெறவும், வழங்கவும் பயனுள்ள தகவல்களின் கிடைப்பத்தன்மையை மேம்படுத்தல் மூலம் நூலக வாசகர்களுக்கு தெளிவான மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குகிறது.
- இது வாசகர்களுக்கு அவர்கள் எங்கிருந்தால் தேவைப்படும் போதெல்லாம் அதிகளவிலாக தகவல்களை பெற முடிதல், விடயப் பகுதியுடன் பல் ஊடக உள்ளடக்கத்தையும் கொண்டிருத்தல், பயனர்கள் எளிதாக செயற்படக்கூடிய முகப்பு, மேம்பட்ட தேடல், மீட்டெடுத்தல், ஏனைய டிஜிடல் நூலகங்களோடு ஒன்றிணைதல் போன்ற வசதிகளை கொடுக்கிறது.
சேவைகள்
- வாசக சேவைகள்
- உசாத்துணை சேவைகள்
- இணையதள மூலம் டிஜிடல் சேவைகள்
- ஒன்லைன் கானொளி நூலகத்தை பராமரித்தல்
- அச்சிடுதல், ஸ்கேனிங், நடலெடுக்கும் சேவைகள்
- தற்போதைய விழிப்புணர்வு சேவைகள்
- இலக்கிய ஆய்வு
- நூலகங்களுக்கிடையில் இரவல் சேவை
- தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை பரவலாக்கம் செய்தல்
- ஒடியோ / காட்சி சேவை
- ஒன்லை சேவைகள் – doa.nsf.ac.lk
- ஆய்வு முகாமைத்துவ தகவல் தொகுதியை பராமரித்தல்
மத்திய விவசாய நூலகத்தின் தலைவர்
திருமதி. ஐ.எஸ்.எம். ஹலீம்தீன்
பிரதி பணிப்பாளர் (தகவல் மற்றும் தொடர்பாடல் - தலைமையகம்)
- +94 812 389198
- +94 812 030047
- haleemdeen.ism@doa.gov.lk
- centrallibrary.doa@gmail.com
- library@doa.gov.lk
எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
- மத்திய விவசாய நூலகம், த.பெ இல 47 ,கன்னொறுவை
- centrallibrary.doa@gmail.com
- library@doa.gov.lk
- +94 812 389198
- +94 812 389198
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 முதல் பி.ப 4.15 வரை (வார இறுதி நாட்களிலும்,பொது விடுமுறை நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்)