
- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல் : naicc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 030040/41/42/43
- தொலைநகல் : +94 812 030048
NAICC துணை அலகுகள்
விவசாய தொழினுட்ப பூங்கா கன்னொறுவை
மக்கள் விவசாய தகவல்களை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வதற்காக பொது விவசாய விரிவாக்கற் சேவைகளை எளிதாக்குவதற்கு விவசாய தொழினுட்ப பூங்கா மற்றும் கண்காட்சி ஊடாக பயனுள்ள, வினைத்திறனான, தேவைக்கேற்ப பதிலளிக்கக் கூடிய, ஒருங்கிணைந்த விரிவாக்கற் சேவையை வழங்குவதே கன்னொறுவை விவசாய தொழினுட்ப பூங்காவின் நோக்கமாகும். மேலும் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்தல், இலாபத்தை உயர்த்துதல் உற்பத்தித்திறனை மேம்படுத்தல், நன்கு அறிந்துகொள்ள பயன்படுத்தல், பாரம்பரிய விவசாய பெறுமதிகளை பாதுகாப்பதற்காக உணவுப்பயிர் நில அழகுபடுத்தல் பற்றிய புதிய சிந்தனையுடன் விவசாய சுற்றுலாவை மேம்படுத்தல்.
வரலாறு
2016க்கு முன் இந்நிறுவனம் ஆடியோ விஷூவல் சென்டர் (AVC) என அழைக்கப்பட்டது. இது 1980 இல் DOA வின் விரிவாக்கம் மற்றும் பயிற்சி பிரிவின் கீழ் நிறுவப்பட்டது. AVC (ஆடியோ விஷூவல் சென்டர்) விவசாயத் துறையில் பரந்த அளவிலான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் ICT பயன்பாட்டை உள்ளபக்கியுள்ளது. 1989 ம் ஆண்டு AVC (ஆடியோ விஷூவல் சென்டர்) ஒரு வீடியோ பிரிவை நிறுவுவதற்கு தீர்மானித்தது. 1944ம் ஆண்டு வீடியோ தயாரிக்கப்பட்ட முதல் தொலைக்காட்சி ஆவணப்படம் (பெரிய வெங்காயம்) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. AVC (ஆடியோ விஷூவல் சென்டர்) முதலிடம் பெற்றுற கம் உதாவ கண்காட்சிக்கு 1991 ல் DOA வை பிரதிநிதித்துவப்படுத்தி கண்காட்சியை நடாத்தும் பொறுப்பு முதற்தடவையாக கிடைத்தது. அன்றிலிருந்து DOA மற்றும் அமைச்சையும் பிரநிதிநித்துவப்படுத்தி கண்காட்சியை நடாத்துவதற்கு DOA வின் பொறுப்புவாய்ந்த நிறுவனமாக AVC (ஆடியோ விஷூவல் சென்ரர்) ஆனது. 2004ம் ஆண்டு கன்னொறுவை விவசாய வளாகமானது (Agriculture Complex, Gannoruwa) யின் பகுதியாக தேசிய தொழினுட்ப பூங்கா என (National Agriculture Technology Park) மாற்றப்பட்டது. 2016ம் ஆண்டில் ஏவிசி (AVC) நிறுவனம் தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையம் (NAICC) ஆக தரமுயர்த்தப்பட்டது. இதன் விளைவாக தொழில்நுட்ப பூங்காவை நிர்வகிக்கவும். கண்காட்சிகளை நடாத்தவும் ஒரு தனி அலகாக 2016 ஒக்டோபரில் தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் (NAICC) கீழ் கன்னொறுவை விவசாய தொழினுட்ப பூங்கா அலகு ஸ்தாபிக்கப்பட்டது.

சுருக்கமான அறிமுகம்
விவசாய தொழினுட்ப பூங்கா, விவசாயத்தின் கீழ் தொடர்புபட்ட அனைத்து பாடப்பரப்புக்களையும் உள்ளடக்கிய 30ற்கும் மேற்பட்ட வேறுபட்ட விவசாய செயல் விளக்க அமைப்புக்களை கொண்டது. இது மாதிரி வீட்டுத் தோட்டம், அருங்காட்சியகம், காளான் அலகு, இழைய வளர்ப்பு அலகு, பூச்சி மற்றும் நோயியல் அலகு, தாவர தனிமைப்படுத்தல் அலகு, வாசனைதிரவிய பூங்கா, மண் பாதுகாப்பு அலகு, மூலிகை அலகு, பாரம்பரிய சேனைப் பயிர்ச் செய்கை, கிழங்கு சேகரிப்பு, தேயிலை தோட்டம், குள கலாசாரம், ஈ சொர்ஜன் செய்கை, நெல் விவசாயம், பிற தோட்டப் பயிர்கள், இலை மரக்கறி தோட்டம், சேதன விவசாயம், காட்டுப் பயிர்கள், மரக்கறி தோட்டம், வானிலை அலகு,தேனீ வளர்ப்பு அலகு, நுண் நீர்ப்பாசனம் மற்றும் பாதுகாப்பட்ட செய்கை உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப விவசாய அலகு, உள்ளிட்ட மேலும் ஹெல போஜுன் பாரம்பரிய உணவகம், விதை மற்றும் நடுகை பொருள் விற்பனை நிலையம், DOA வெளியீட்டகம், பெறுமதி சேர்க்கப்பட்ட உணவு விற்பனை பொருட்கள் GAP காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நிலையம் போன்றவற்றை கொண்டுள்ளது. பூங்காவனானது ஞாயிறு மற்றும் ஏனைய பொது விடுமுறை நாட்களை தவிர்ந்த வாரநாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.00 மணி வரை மக்களுக்காக திறந்திருக்கும். நுழைச்சீட்டுக் கட்டணம் பின்வருமாறு
உள்ளூர்
|
நுழைவுச்சீட்டு கட்டணம்
|
வெளியூர்
|
நுழைவுச்சீட்டு கட்டணம்
|
---|---|---|---|
வளர்ந்தோர்
|
20.00 ரூபா
|
வளர்ந்தோர்
|
5.00 ரூபா
|
பாடசாலை மாணவர்கள்
|
5.00 ரூபா
|
சிறுவர்கள் (12 வயது)
|
100.00 ரூபா
|
சிறுவர்கள் (12 வயது)
|
10.00 ரூபா
|
|
|
குறிக்கோள்கள்
- சரியான நேரத்தில் முக்கிய தேவைக்கு பதிலளிக்கும் விவசாயத் தகவலை மக்கள் மத்தியில் பரப்புதல்
- தேவையின் அடிப்டையில் DOA வை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மட்டத்திலான விவசாய கண்காட்சிகளை நடாத்துதல்,
- நாட்டில் வீட்டுத் தோட்டசெயற்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக உணவுப்பயிர் நில அழகுபடுத்தலை ஊக்குவித்தல்
- விவசாயத் துறை தொடர்பான தொழில்நுட்பங்கள், பாரம்பரிய, உள்நாட்டு அறிவு என்பவற்றை பாதுகாத்தல்
- பாரம்பரிய விவசாய மதிப்புகளை பாதுகாப்பதற்காக, இலாபத்தை உயர்த்துவதற்காக நாட்டில் விவசாய சுற்றுலா என்ற கருத்தை ஊக்குவித்தல்.
- NITA நிறுவனம் FS தொழில்நுட்ப கல்லூரிகள் IFS என்வற்றிலிருந்து புதிதாக இணையும் NVQ நிலை 4,5,6 மாணவர்களுக்கு பயிற்சியளித்தல்
சேவைகள்
- விவசாய தொழில்நுட்ப பூங்காவின் செயல் முறை விளக்கங்கள் மற்றும் கண்காட்சிகள் மூலம் விவசாய விரிவாக்கல்
- DOA மற்றும் MOA விசேட நிகழ்வுகளுக்காக இட ஏற்பாடு
- உணவுப்பயிர் நில அழகுபடுத்தல் தள வடிமைப்புக்கான ஆலோசனை
- விவசாய சுற்றுலாவுக்கான ஆலோசனை
- விசேட விவசாய பயிற்சிகளை நடாத்துதல்.
செயற்பாடுகள்
- அரிசி, காய்கறிகள், வீட்டுத்தோட்டம், மண் பாதுகாப்பு, காளான் உள்ளடங்களாக 30க்கும் மேற்பட்ட வேறுபட்ட செயல் விளக்க மாதிரி அமைப்புகளின் முகாமைத்துவம்.
- விவசாய போதனாசிரியர்களின் நேரடி வழிகாட்டல், மேலும் ஒவ்வொரு செயல்ழிக்க அமைப்புகளிலும் தகவலை வழங்கக் கூடிய துண்டுப்பிரசுங்கள் மூலம் சாதாரண மக்களுக்கு விவசாய அறிவு மற்றும் திறனை பரப்புதல்
- சில விவசாய செயற்பாடுகள் விசேடமாக காளான் செய்கையில் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் திறனை வளர்ப்பதற்கான வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்க செயன் முறை பயிற்சி நடாத்துதல்.
- தேசிய மட்டத்திலான விவசாய கண்காட்சிகளை ஒழுங்குமைத்தலும், நடாத்துதலும்
- NVQ நிலை 4 தொடக்கம் நிலை 6 வரையான மாணவர்களுக்கு 6 மாத பயிற்சியை வழங்குதல்
- கிராமம்புற சமூகத்திற்கு தொழில்நுட்ப செய்திகளை வழங்க வீதி நாடகங்களை ஒழுகுமைத்தலும் நடாத்துதல்
- உணவுப் பயிர் நில அழகுபடுத்தல் தளங்கள், தொழில்நுட்ப பூங்கா, கண்காட்சி தளங்கள், விவசாய சுற்றுலாத் தளங்கள் என்பவற்றை வடிவமைத்தல்.
- DOA நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளையும், இடத்தையும் நிர்மாணித்தல்.
விவசாயதொழில்நுட்ப பூங்காவின் தலைவர் – கன்னொறுவை

Mr. I.G.K. Janaka
Deputy Director of Agriculture
- +94 812 388618
- +94 718 147070
- avcentre@sltnet.lk

திரு. ஐ.ஜி.கெ. ஜனக
விவசாய பிரதிப் பணிப்பாளர்
- +94 812 388618
- +94 718 147070
- janaka.igk@doa.gov.lk
- janakaigk@gmail.com
- apark.gan@doa.gov.lk
























எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
- விவசாய தொழில்நுட்ப பூங்கா அலகு , கன்னொறுவை
- apark.gan@doa.gov.lk / apgdoa@gmail.com
- +94 812 388618
- +94 812 388618
- திங்கள் முதல் வெள்ளி வரை – மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை(வார இறுதி நாட்களிலும்,பொது விடுமுறை நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்)