NAICC – AGRO TECHNOLOGY PARK – BATA ATA – Ta

National Agriculture Information and Communication Centre

NAICC துணை அலகுகள்

சமல் ராஜபக்ஷ விவசாய தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா பூங்கா படாத

இலங்கையில் 2008ல் தென் மாகாணத்தில் படாதாவில் விவசாய தொழில்நுட்ப பூங்கா நிறுவப்பட்டது. பசுமை பூங்கா எனும் கருத்தில் இலங்கையிலுள்ள இரண்டாவது விவசாய தொழில்நுட்ப பூங்கா இதுவாகும்.முன்னால் விவசாய அமைச்சர் திரு. சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னால் விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் ஆகியோரின் யோசணைக்கு அமைய இந்த பூங்கா விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் பொருட்டு நிறுவப்பட்டது.
விவசாய தொழில் நுட்ப பூங்காவில் வரல் வலய எல்லைக்கு அப்பாற்பட்ட 50 ஏக்கர்களை சுற்றி பரவியுள்ள உயர் பயிர் பல்வகைமை கொண்ட பல்வேறு விவசாய பயிர்கள் உள்ளன.உலகின் முதலாவது விவசாய நினைவுச்சின்னம் பூங்காவின் நுழைவாயிலில் உள்ளது.இருகைகள் பிணைத்தவாறான இச்சின்னம் பாரம்பரிய விவசாயியையும் விவசாயத்தையும் குறிக்கின்றது.

பணிநோக்கு

பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் விவசாய பண்ணை அனுபவத்தை வழங்குவதன் மூலம் பொருளாதார உற்பத்தி மற்றும் நிலையான விவசாயத்தை மேம் படுத்துவதற்கானபுதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு வழங்கல்.

bg

வரலாறு

2006ம் ஆண்டு அப்போதைய விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் விவசாய பணிப்பாளர் ரொஹான் விஜயகோன் ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு பொதுமக்களின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.50 ஏக்கர் கொண்ட படாத விவசாய தொழில்நுட்ப பூங்காவானது கன்னொறுவை விவசாய தொழில்நுட்ப பூங்காவை அடுத்து இலங்கையில் உள்ள இரண்டாவது விவசாய தொழில்நுட்ப பூங்கா என அறியப்படுகிறது.

பூங்காவின் முன் நுழைவாயிலில் ஒரு அழகிய சோடி கைகள் மற்றும் விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.இது விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் இடையிலான உறவைக் குறிக்கின்றது.

இது விவசாய திணைக்களத்தின் தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்திற்குறியது.

bg

குறிக்கோள்

  1. விவசாய திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள் மற்றும் செய்கை தொழில்நுட்பங்கள் தொடர்பான நேரடி செயல் விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்குதல்.
  2. பாரம்பரிய மற்றும் புதிய தொழில்நுட்ப செயல்விளக்கங்கள்.
  3. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விவசாய சுற்றுலா விடுதி.
  4. விவசாயி,பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான விவசாய தகவல் மற்றும் ஆலோசனை நிலையத்தை நிறுவுதல்.
  5. நேரடி வேலை வாய்ப்பு (விவசாய ஆலோசகர்,தொழிலாளர்)மற்றும் சாதாரண வேலைவாய்ப்பு (உள்ளூர் உணவு விற்பனையில் சுய வேலை வாய்ப்பு) உருவாக்குதல்.
  6. விவசாய தொழில் முனைவோர் அபிவிருத்திக்கான வழிகாட்டல்.
bg

சேவைகள்

  1. பயிர் செயல் விளக்கங்கள் மற்றும் செயல்முறை உதாரணங்களின் ஊடாக பாடசாலை மாணவர்கள்,உயர் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் விவசாயி குழுக்களுக்கு விவசாய தொழில்நுட்ப அறிவை வழங்குதல்.
  2. விவசாய திணைக்களத்தால் பரிற்துறைக்கப்பட்ட பயிர் வர்க்கங்களின் மாதிரியை நிறுவுதல்.
  3. விவசாய உயர் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கான வாய்ப்புக்களை வழங்கல்.
  4. சுற்றுலா பயணிகள் (உள்ளூர் மற்றும் வெளிநாடு) இயற்கை அழகின் உத்வேகத்துடன் பொழுது போக்கை அனுபவிக்கவும் வாய்ப்புகளை வழங்கல்.
  5. சுற்றுலா பயணிகளுக்கு மலிவு விலையில் உயர் தரமான உணவை ஏற்பாடு செய்தல்.
  6. மலிவு விலைகளில் பண்ணை உற்பத்திகளை ஏற்பாடு செய்தல்.
  7. திருமண புகைப்படங்களுக்கான பின்னணியை ஏற்பாடு செய்தல்.

நுழைவுச் சீட்டு கட்டணம்

உள்ளூர் நுழைவுச்சீட்டு கட்டணம் வெளியூர் நுழைவுச்சீட்டு கட்டணம்
வளர்ந்தோர் 100.00 ரூபா வளர்ந்தோர் 1000.00 ரூபா
பாடசாலை மாணவர்கள் 20.00 ரூபா சிறுவர்கள் (12 வயது) 500.00 ரூபா
சிறுவர்கள் (12 வயது) 50.00 ரூபா மீன் சிகிச்சை பிரிவு 500.00 ரூபா
மீன் சிகிச்சை பிரிவு 200.00 ரூபா

எமது படச்சேகரிப்பு

சமல் ராஜபக்ஷ விவசாய தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலர பூங்காவின் தலைவர்-படாத

திரு.கே.ஆர்.டபிள்யு.கீர்த்தி

உதவி விவசாய பணிப்பாளர்

எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

சமூக ஊடகம்