Finance- Subunits-DevelopmentAccounts – ta


அபிவிருத்தி நிதிக்கிளை

நம் நிதிப்பிரிவின் கீழ் உள்ள பிரதான அலகொன்றாகும். எங்களது பிரதான பொறுப்புக்களில் விவசாயத் திணைக்களத்தின் மூலதனச் செலவு நடவடிக்கைகளுக்கான ஆரம்ப கொடுப்பனவு வவுச்சர் பத்திரங்களை ஆரம்ப சோதனைகளின் பின் பொறுப்பேற்றல் பிரதானமானதாகும்

20200529_104152

பணிநோக்கு

” நிதிப்பிரிவின் அனைத்து இலக்குகளையும் அடைந்து கொள்ள உதவும் வகையில் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக குறுங்கால மற்றும் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை செயற்படுத்தும் போது நிதிப் பங்களிப்பை வழங்குதல் “

சேவைகள்

  • விவசாயத் திணைக்களத்தின் மூலதனச் செலவு செயற்பாடுகளுக்காக அபிவிருத்திக் கணக்குகள் கிளைக்கு கிடைக்கபெறும் கொடுப்பனவு வவுச்சர் பத்திரங்களை ஆரம்ப சோதனைகளின் பின் பெற்றுக்கொள்ளல்
  • ஏற்புடையதல்லாத கொடுப்பனவு வவுச்சர் பத்திரங்களை உடனடியாகக் கையளித்தல் மற்றும் உரிய அனைத்து கொடுப்பனவு வவுச்சர் பத்திரங்களிலும் உரிய திகதி முத்திரையினை இடுதல்
மேலும் படிக்க...
  • அனைத்துக் கொடுப்பனவு வவுச்சர் பத்திரங்களையும் குறித்த செலவு விடயங்களுக்கு ஏற்ப மற்றும் குறித்த விடயப் பொறுப்புக்களுக்கு ஏற்ப உத்தியோகத்தர்களுக்குக் கையளித்தல் .
  • குறித்த விடயப் பொறுப்பு உத்தியோகத்தர் தனது அனைத்து வவுச்சர் பத்திரங்களையும் உரிய முறையில் சோதனை செய்து குறித்த கணணி நிகழ்ச்சித்திட்டத்தினுள் உள்ளடக்கி மற்றும் ஏதேனும் குறைபாடுகளுடன் கூடிய வவுச்சர் பத்திரங்கள் காணப்படின் அக்குறைபாடுகளை செம்மைப்படுத்தி மீள அனுப்புவதற்காக குறித்த பிரிவுகளுக்கு உடனடியாக அனுப்புதல். .
  • பிரிவிற்கு பொறுப்பான கணக்காளர் மூலம் வவுச்சர் பத்திரங்களைச் சோதனை செய்து உறுதிப்படுத்தல்.
  • அவ்வாறு உறுதிப்படுத்திய வவுச்சர் பத்திரங்களை சிகாஸ் கணணி நிகழ்ச்சித்திட்டத்தினுள் பதிவதற்கு அனுப்புதல் .
  • ஒதுக்கீட்டு எல்லைகள்  மற்றும் நிதி நிலைமைகளை கவனத்திற் கொண்டு உறுதிப்படுத்திய வவுச்சர் பத்திரங்களுக்கான காசோலைகளை அச்சிடல்.
  • அனைத்துக்  காசோலைகளையும் சாதாரண தபால் மூலம்  குறித்த பணம் பெறுபவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • ஒரு நிமித்த மற்றும் உப கட்டுநிதிகளுக்கு வழங்கப்படும் முற்பண ஆவணத்தைப்  பேணி வருதல்.
  • காணாமல் போன காசோலைகள் தொடர்பான ஆவணத்தினைப் பேணி வருதல்.
  • பொது வைப்புப் பேரேட்டினைப் பேணி வருதல்.
  • உரிய அறிக்கைகளைத் தயாரித்து பொதுத் திறைசேரிக்கு அனுப்புதல்.
  • கணக்காய்வு விசாரணைகளுக்குப் பதில்களை அனுப்புதல்.
  • விரிவான மக்கள் தொடர்பாடல் ஒன்றினைப் பேணி வருதல்.
  • செலுத்தி முடிக்கப்பட்ட வவுச்சர் பத்திரங்களை கணக்காய்வுப் பிரிவிடம் முறையாக ஒப்படைத்தல்.

அபிவிருத்தி நிதி கிளை – அலுவலர் குழாம்

user

திருமதி. எஸ்.எம்.என். செனவிரத்ன

கணக்காளர் (கி.கண.சே.- I)

எம்மை எங்களை தொடர்புகொள்ள