வரையறுக்கப்பட்ட போட்டிப்பரீட்சையின் கீழ் இலங்கை விவசாய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உதவி விவசாய பணிப்பாளர்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
11 வருட இடைவெளிக்குப் பின்னர், வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் கீழ் இலங்கை விவசாய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளின் நியமனம் 20.08.2024 அன்று தாவர கருமூல வள நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர், விவசாய பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
உதவி விவசாய பணிப்பாளர் (விவசாய அபிவிருத்தி) 79 பதவிகளுக்கும், உதவி விவசாய பணிப்பாளர் (விவசாய ஆராய்ச்சி) 53 பதவிகளுக்கும், உதவி விவசாய பணிப்பாளர் (விவசாய பொருளாதாரம்) 4 பதவிகளுக்கும், 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பணிப்பயிற்சி நடைபெற்றதுடன் புதிய பதவிக்கான பணிகள் ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.





















