"காலநிலையை தாங்கக்கூடிய விவசாய தொழில்நுட்பங்கள்” தொடர்பிலான செயலமர்வு
விவசாய திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “ காலநிலையை தாங்கக்கூடிய விவசாய தொழில்நுட்பங்கள்” எனும் செயலமர்வு 2024.04.04 அன்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விவசாய திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு காலநிலைகளில் வெற்றிகரமாக பயிரிடப்படக்கூடிய பயிர் வகைகள், காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பங்குதாரர்களுக்கு எவ்வாறு திறம்பட தகவல்களை வழங்குவது என்பது பற்றிய தகவல்கள் கவர்ச்சிகரமான முறையில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா , விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாயத்துறை தொடர்பான பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.