விவசாய தொழில்நுட்ப கண்காட்சி “Agri tech -24”
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் மேற்பார்வையுடன் “விவசாய தொழில்நுட்ப பார்வை -2024” கண்காட்சியை ஒழுங்கு செய்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான மைல்கல் நாட்டப்பட்டது.இந்நிகழ்வு மார்ச் 2 ஆம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரை ஹுங்கம பட்டஅத்தவில் வெற்றிகரமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் விவசாயம் மற்றும் பெருந் தோட்ட கைத்தொழிலுடன் தொடர்புடைய 150 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபற்றின.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் ,விவசாயத் திணைக்களத்தின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் மக்கள் பார்வைக்காக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
கண்காட்சியின் முதன்மை நோக்கம் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகள், விவசாய தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு பரப்புவதாகும்.நான்கு நாட்களும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்ததோடு.மார்ச் 2 ஆம் திகதி விவசாய தினம் , மார்ச் 3 ஆம் திகதி கால்நடை அபிவிருத்தி தினம், மார்ச் 4 ஆம் திகதி பெருந்தோட்ட கைத்தொழில் தினம், மார்ச் 5 ஆம் திகதி கிராமிய அபிவிருத்தி தினம் எனும் கருப்பொருள்களுடன் இக்கண்காட்சி இடம்பெற்றது.
பாரம்பரிய சேனை, நகர்ப்புற தோட்டம்,குறைந்த பாவனையுடைய பழப்பயிர் பூங்கா , வயல் நிலங்கள்,நவீன தொழில்நுட்ப மரக்கறி செய்கை , மீன் வருடும் குளங்கள் மக்களை கவரும் இடங்களாக காணப்பட்டன.இந்த பல்வேறுபட்ட காட்சிகள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தூண்டின.மேலும் மக்கள் மத்தியில் பட்டஅத்த விவசாய தொழில்நுட்ப பூங்காவிற்கு வருவதற்கான ஆர்வத்தையும் இக்கண்காட்சி தூண்டியதுடன் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக இக்கண்காட்சியானது பெறுமதியான தகவல்களையும், நடைமுறை பயிற்சி அமர்வுகளையும், மற்றும் நேரடி விளக்கங்களையும் வழங்கியது.பங்கேற்பாளர்களுக்கு மரக்கறி,பழங்கள் மற்றும் பிறகளப்பயிர்களின் நடவுப்பொருட்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கமளிக்கப்பட்டது.மரக்கறிப் பயிர்கள் மற்றும் பிறகளப் பயிர்களின் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய உத்திகள் பற்றிய தொழில்நுட்ப நுண்ணறிவும் அளிக்கப்பட்டது.மேலும் பார்வையாளர்களுக்கு நீர் வழங்கல் மற்றும் பிற கள செயற்பாட்டிற்கான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரமயமாக்கல் தொடர்பான நேரடி விளக்கங்களில் பங்கேற்கும் சந்தர்ப்பமும் கிடைத்ததுடன் கலப்பின விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் , பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாயம் பற்றிய அறிவையும் பெற முடிந்தது.இந்த அமர்வுகள் விவசாயத்துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சித்துறை நிபுணர்களால் நடாத்தப்பட்டதுடன் பங்கேற்பாளர்களுக்கு விரிவான மற்றும் வளமான அனுபவத்தை உறுதி செய்கிறது.