விவசாய கல்லூரியின் டிப்ளோமா விருது வழங்கும் விழா
விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாய கல்லூரியின் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா (NVQ 6) மற்றும் தேசிய டிப்ளோமா (NVQ 5) பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா விருது வழங்கும் விழாவானது 12.01.2023ம் திகதி குண்டசாலை, இலங்கை விவசாய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
விவசாய திணைக்களத்தில் பரந்தளவில் சேவையாற்றி ஒய்வு பெற்ற விவசாய பணிப்பாளர் நாயகம் திரு கே.ஜி. சிரியபால பிரதம அதிதியாகவும், தற்போதைய விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி, மேலதிக பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி) எச்.எம்.எஸ்.பி. திரு ஹேரத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் விவசாய கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டதுடன் 1174 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.















