விரிவாக்கல் பயிற்சி நிலையம்

விரிவாக்கல் பயிற்சி நிலையமானது விவசாயச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் உணவுப் பயிர் உற்பத்தியின் உயர் உற்பத்தி திறனினை பேணுவதற்கும் முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது. இந்நிலையத்தின் செயற்பாடுகள் விவசாய விரிவாக்கம், பயிற்றுவித்தல், விவசாயத்துறை சார் கல்வி மற்றும் பரீட்சைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.

பணிப்பாளர்
திரு.J.R.சுதசிங்க
Telephone:(+94)081-2388098
Email:directoretc.doa@gmail.com

தூரநோக்கு
விவசாய விரிவாக்கம், கல்வி மற்றும் பயிற்சியின் ஊடாக விவசாயத் 
துறையில் அதி மேன்மை அடைதல்.
பணிக்கூற்று
இலங்கையானது விவசாயத்துறையில் தன்னிறைவு அடைவதற்கு விவசாயத்
தொழில்முயற்சி அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறையினரின்
பங்களிப்பினை ஊக்குவித்தல்.
நோக்கம் மற்றும் செயற்பாடுகள்
  • விவசாய உற்பத்திகளை தயாரித்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல்.
  • அறுவடைக்கு முன்னான, பின்னான இழப்புக்களை குறைத்துக் கொள்ளல்.
  • ஒன்றிணைந்த விவசாயம் மற்றும் உற்பத்தி முறைகள்.
  • பூக்கள் மற்றும் அலங்கார தாவர உற்பத்தியினை ஊக்குவித்தல்.
  • விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களின் உற்பத்தியினை ஊக்குவித்தல்.