தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையம்
தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையமானது 1988 ஆம் ஆண்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட ஜப்பானிய மானிய ஆதரவுடன் கன்னொருவை விவசாய வளாகத்தில் நிறுவப்பட்டது.இலங்கையிலுள்ள உணவு பயிர்கள் மற்றும் அவற்றின் சமீபமான வனதரங்களை பாதுகாப்பாக பேணுதல் தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தின் தேசிய பொறுப்பாகும். இது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக உணவு பயிர்கள் மற்றும் அவற்றின் வனதர இனங்களின் பிறப்புரிமை மூலவகைமையின் தாவர ஆய்வு,சேகரிப்பு, அறிமுகம், மதிப்பீடு, ஆவணமாக்கல் மற்றும் பேணி பாதுகாத்தலை திட்டமிட்டு நடத்தல்போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
இலக்கு
தாவர பிறப்புரிமை மூலவளங்களைப் பாதுகாத்தல், நிலைபேறாகப் பயன்படுத்துவதன் ஊடாக விவசாயத்தில் அதிமேன்மையை அடைதல்
பணிக்கூற்று
உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் தாவரப் பிறப்புரிமை வளங்களை கண்டுபிடித்தல், பாதுகாத்தல் நிலைபேறாக முகாமைத்துவம்செய்தல் என்பவற்றின் ஊடாக விவசாய ஆராய்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்குவித்தல்.
குறிக்கோள்
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக உணவுப் பயிர்களின் தாவர பிறப்புரிமை மூலவளங்களை ஆய்வு செய்தல், சேகரித்தல், காப்பு செய்தல் மற்றும் மேம்படுத்தல்
தாவரப் பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தின் தொழில்நுட்ப பிரிவுகள்
எங்களை தொடர்பு கொள்ள
- த. பெ. இல: 59, கன்னொறுவை, பேராதனை, இலங்கை.
- pgrc.doa@gmail.com/pgrc@doa.gov.lk
- +94 812 388494
- +94 812 388490
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 8.30 தொடக்கம் பி.ப 4.15 வரை திறந்திருக்கும்.