Home-PGRC | Downloads | Publications | Staff
ஆய்வு பிரிவு
ஆய்வுப்பிரிவானது ஆண்டுதோறும் தமது ஆய்வுக் குழுக்களை நாட்டினுள் அனுப்பி மூலவளங்களை சேகரிக்கின்றது. அதுமட்டுமின்றி இந்நிறுவனமானது ஏனைய நாடுகளுடன் ஒத்துழைத்து நாட்டின் ஆராய்ச்சியாளர்களால்கோரப்படும் வெளிநாட்டு மூலவளங்களை பெற்றுக் கொள்கிறது. மேலும் இப்பிரிவானது ஆய்வுப் பணிகளிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில், நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மூலவளங்களை நீண்டகால காப்பிற்காக தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்திலுள்ள வித்து பரம்பரையலகு வங்கிக்கு வழங்குகின்றது.
ஆய்வுப் பிரிவானது மூன்று பிரதான குறிக்கோள்களை கொண்டுள்ளது
- இலங்கையிலுள்ள பாரம்பரிய, பொருளாதார முக்கியம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் அவற்றின் சமீபமான வனதர இனத்தாவரங்களை எதிர்காலத்தேவைக்காக பாதுகாத்தல்.
- நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆய்வுகளுக்கு தேவையான தாவர மூலவளங்களை சேகரித்து பாதுகாத்தல்.
- அரிய மற்றும் அழியும் ஆபத்துக்குள்ளான தாவர இனங்களின் மூலவளங்களை பாதுகாத்தல்.