TP : +94 812 388494 E-Mail : pgrc.doa@gmail.com
Home -PGRC | Downloads | Publications | Staff
பெருக்கம், இயல்பாய்வு மற்றும் மதிப்பீட்டு பிரிவு
மதிப்பீட்டு பிரிவின் முக்கிய செயற்பாடுகள்
- வித்து பெருக்கம் மற்றும் தூய்மை பராமரிப்பு
வித்து காப்பு செயற்பாட்டிற்காக வித்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் தேவைபாடுடையவர்களுக்கு வித்துக்களை வழங்கள் வித்து பெருக்கத்தின் போது அயன் மகரந்த சேர்கையை தடுக்க கூண்டு காய்களுக்கு மறைப்பிடல் மற்றும் கைகளால் செயற்கை மகரந்த சேர்கை செய்தல் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி பரம்பரையலகு தூய்மை பராமரிக்கப்படுகின்றது.
2. உருவவியல் பண்புகளை சேகரித்தல் (இயல்பாய்வு)
உருவவியல் பண்புகளை சேகரிப்பதன் நோக்கமாவது காப்பு செய்யப்பட்ட வித்துகளின் பரம்பரையலகு பல்வகைமையை ஆய்வு செய்யவும் வேறுப்பட்ட அனுகல் இலக்கங்களைக் கொண்ட பயிர்களை வேறுபடுத்தும் முக்கிய பண்புகளை அடையாளம் காண்பதற்கு மற்றும் தாவர இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தக்கூடிய பயனுள்ள சிறந்த குண இயல்புகளை அடையாளம் காண்பதற்குமாகும்.
- ஆரம்ப மதிப்பீடு செய்தல் – பாதகமான சூழ்நிலைகளால் தாவரத்திற்கு ஏற்படும் தகைப்புகளுக்கான சகிப்புத்தன்மை பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு காட்டும் எதிர்ப்பு தன்மை போன்ற விசேட பண்புகளுக்கான ஆரம்ப / முன் மதிப்பீடு செய்தல்.
- அடையாளம் தெரியாத அனுகல் இலக்கங்களை கொண்ட பயிர்களை அடையாளம் காணுதல்
- இனப்பெருக்கத்திற்கு முன்னதான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- பல்லாண்டு தாவர பரம்பரையலகுகளை பராமரித்தல்