Home -PGRC | Downloads | Publications | Staff
தரவு முகாமைத்துவ பிரிவு
தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தின் தரவு முகாமைத்துவ பிரிவு 1988 ஆம் ஆண்டு முதல் பாஸ்போட் தரவுகள், காப்பு மற்றும் உருவவியல் பண்புகள் என தாவரப் பிறப்புரிமை மூலவளத் தரவுகளை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இத்தரவுகள் முறையே ஆய்வு பிரிவு, காப்பு பிரிவு, மதிப்பீடு மற்றும் இயல்பாய்வு பிரிவுகளிலிருந்து தாவர பிறப்புரிமை மூலவளங்கள் தரவுத்தள அமைப்பிற்கு வழங்கப்படுகின்றது.
பல்வேறுப்பட்ட பயிர் வகைகளான வனதரங்கள், களைகள், பாரம்பரிய பயிர் இனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிர் இனங்கள் என்பவற்றின் தரவுகள் கணனிமயமாக்கப்பட்டுள்ளன.
தரவு முகாமைத்துவ பிரிவின் மூலம் ஆற்றப்படும் ஏனைய சேவைகள்
- தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தின் மூலம் கையாளப்படும் திட்டங்களின் தரவு முகாமைத்துவம் செய்தல் (தேசிய மற்றும் சர்வதேச திட்டங்கள்)
- தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தின் விதிமுறைகளுக்கு இணங்க கோரிக்கைகளுக்கு தகவல் மற்றும் தரவுகளை வழங்கள்.