- முகவரி: கண்ணோருவ, பெரடேனிய, இலங்கை
- மின்னஞ்சல் : naicc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 030040/41/42/43
- தொலைநகல் : +94 812 030048
மத்திய விவசாய நூலகம்
வினைத்திறனான நூலக சேவையினையும், விவசாய திணைக்களத்தின் காணொளிகளை இலகுவாக அணுகவும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நூலக வெளியீடுகளை பாதுகாப்பதன் மூலம் விவசாய அறிவு கொண்ட சமூகத்தை உருவாக்குக்கும் நோக்குடன் 2017 இல் விவசாய திணைக்களத்தின் மத்திய விவசாய நூலகம் கன்னொறுவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையத்திற்கு வழங்கப்பட்டது.
மத்திய விவசாய நூலகம்
வினைத்திறனான நூலக சேவையினையும், விவசாய திணைக்களத்தின் காணொளிகளை இலகுவாக அணுகவும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நூலக வெளியீடுகளை பாதுகாப்பதன் மூலம் விவசாய அறிவு கொண்ட சமூகத்தை உருவாக்குக்கும் நோக்குடன் 2017 இல் விவசாய திணைக்களத்தின் மத்திய விவசாய நூலகம் கன்னொறுவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் மையத்திற்கு வழங்கப்பட்டது.
நூலக சேவைகள்
தற்போதைய விழிப்புணர்வு சேவைகள்
நூலகத்தின் சமீபத்தியபெற்றுக் கொள்ளப்பட்ட வெளியீடுகள் பற்றிய விடயங்களை நூலக உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகிறது. புதிய வருகை பட்டியல் மின்னஞ்சல் வாயிலாக நூலக பயனர்களுக்கு தொடர்ச்சியாக அனுப்பப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை பரவலாக்கம் செய்தல் (SDI)
நூலக உறுப்பினர்களின் ஆர்வமான பகுதியின் மீது ஒரு கண்ணோட்டத்தைவைத்து அவர்களது துறையில் பரந்த அறிவை கொடுத்து தக்கவைத்துகொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன.
வாசகர் சேவை மற்றும் உசாத்துணை சேவை
இரவல் வழங்குதல் மற்றும் உசாத்துனை புத்தகங்கள் மூலம் நூலகத்தில் உள்ள விவசாய தகவல்களை இலகுவாக பெறுவதற்கான வினைத்திறனான அகரவரிசைப்படுத்தப்பட்ட முறை.
நூலகங்களுக்கடையிலான இரவல் சேவைகள்
மத்திய விவசாய நூலகத்தில் இல்லாத நூல்கள் ஏனைய நூலகங்களில் இருந்து நூலகங்களுக்கிடையிலான இரவல் சேவைகள் அடிப்டையில் தற்காலிகமாக இரவல் பெறலாம். இந்த வசதியை பெற்றுக் கொள்வதற்காக நூலகத்திற்கு தமது கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
இப்போதே கோருங்கள்
விவசாய திணைக்களத்தினால் வெளியிடப்படும் அனைத்து விவசாயம் சம்பந்தப்பட்ட வெளியீடுகள், முக்கிய ஆவணங்கள், வரலாறு என்பவற்றின் பின்னடைலான டிஜிடல் மாற்றம் மற்றும் தகவல் தொழினுட்ப மென்பொருள், வன்பொருளை பயன்படுத்திய ஆவண முகாமைத்துவ தொகுதி நூலகங்களில் காணக்கிடைக்கிறது.
இலக்கிய மதிப்பீடு
இலக்கிய ஆய்வு என்பது ஒரு தலைப்பில் முந்தைய ஆராய்ச்சியின் சுருக்கமாகும், இலக்கிய ஆய்வு மதிப்பீடுகள், புலமைசார் கட்டுரைள், புத்தங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆராய்ச்சிப் பகுதியுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள்
அச்சிடுதல், ஸ்கேனிங், நகலெடுக்கும் சேவைகள்
அச்சிடுதல், ஸ்கோனிங், நகலெடுக்கும் வசதிகள் நூலகத்தில் உள்ளன. பயனர்கள் உசாத்துனை விடயங்களின் உசாத்துனை நூல், கலைக்களஞ்சியம், நூல்கள் சஞ்சிகைள் முதலியன) நகலொன்றை பெற முடியும்
ஆடியோ, காட்சி சேவை
நூலகத்தில் உள்ள ஆடியோ காட்சி வளங்களை ( விவசாய திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட விவசாயம் தொடர்பான காணொளிகள்) நூலக உறுப்பினர்கள் பயன்படுத்த முடியும். பயனர்களுக்கு வசதியாக தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நூலக ஊழியர்களும் இந்த வளங்களை பயன்படுத்துவதில் உறுப்பினர்களுக்கு உதவி செய்கின்றனர்.
நூலக பயிற்சியை வழங்குதல்
நூலக விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கு மத்திய நூலகமானது வருடாந்த, அரையாண்டு பயிற்சியை வழங்கும்.
தகவல் பெறுதல்
ஆய்வுகள் தேவையான ஆய்வு உத்திகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆய்வுத் தலைப்பு இனங்காணப்பட வேண்டும். நூலக விடயம் இனங் காணப்பட்டதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். தகவல் பெறுவதற்கான அனைத்து வசதிகளும் வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
உசாத்துணை சேவை
வாசகர் கோரிக்கைகளின் படி தேவையான சரியான தகவல்கள் நூலகத்தில் கிடைக்கிவில்லை எனின் வளங்களையும் சேவைகளையும் பெறுவதற்கு பொருத்தமான ஏனைய நூலகங்களை பரிந்துரை செய்து அவர்களிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.