PGRC- Biotechnology -TAMIL

செயற்கை கல காப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப பிரிவு

இப்பிரிவானது புதிய மேம்படுத்தப்பட்ட உயிரியல் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் தாவர மூலவுரு காப்பு மற்றும் மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது இது செயற்கை கல (Invitro)பாதுகாப்பு மற்றும் மூலக்கூறு ஆய்வுகூடம் என இரண்டு ஆய்வுகூடங்களை கொண்டுள்ளது.

செயற்கைக் கால முறை என்பது கண்ணாடி கலங்களினுள் (Glass vessels) கிருமியழிக்கப்பட்ட நிபந்தனையில் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மூலவளங்களை பாதுகாப்பது ஆகும். இவ் மந்தமான வளர்ச்சி காப்பு தொழில்நுட்பம் முக்கியமாக வித்துக்களை உற்பத்தி செய்யாத அல்லது வழமையான வித்து பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத மறுசீரமைக்கும் வித்துக்களைக் கொண்ட  தாவரங்களைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. எனவே வேர் மற்றும் கிழங்குகள், பல அயனமண்டல பழப்பயிர் தாவரங்கள் போன்ற தாவர இனப்பெருக்கம் செய்யப்பட்ட பயிர் இனங்கள் செயற்கை கல (Invitro ) முறைகளைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும் இப்பிரிவானது செயற்கைக் கல முறை மற்றும் தாவர மூலவளங்களை பயன்படுத்துவது தொடர்பாக வேறுப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. தாவர மூலவளங்களின்  நீண்டகால காப்பு தொடர்பான மிகை குளிர்காப்பின் பயன்பாடு தொடர்பாகவும் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

உயிரியல் தொழில்நுட்ப பிரிவின் மூலக்கூற்று உயிரியல் பிரிவானது பரம்பரையலகு வங்கியில் காப்புசெய்யப்பட்ட மூலவளங்களின் மூலக்கூறு பண்புகள், நிறமூர்த்தங்களில் பட்டைக்குறி தொழில்நுட்பங்கள் மூலம் அடையாளம் காணப்படாத மூலவளங்களின் இனங்கள், பயிர் இனங்களின் பல்வகைமை மதிப்பீடு மற்றும் பயிர் இனங்களின் விசேட பண்புகளுக்கான பரம்பரையலகு அடையாளம் காணல் ஆகியவற்றின் மூலம் தாவர பிரம்புரிமை மூலவளங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துகிறது.

காப்பு செய்யப்பட்ட மூலவளங்களை கையாளுவதையும் தாண்டிய,  ஆராய்ச்சி நடவடிக்கை விவசாய திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கலப்பின பயிர் வகைகளின்  கலப்பின சோதனை, உயிர், உயிரிலி தகைப்புகளுக்கு ……. காரணமாக முக்கியமான பரம்பரையலகுகளை கொண்ட தாவர மூலவளங்களை கண்டறிதல் மற்றும் பிரபலமான தாவர வகைகளில் அத்தகைய பரம்பரையலகுகளை இணைக்க தாவர இனப்பெருக்கத்தை  ஆரம்பித்தல் போன்ற பல்வேறு  அம்சங்களை இது கொண்டிருக்கிறது மேலும் பயிர் மேம்பாட்டை எளிதாக்க முன் இனப்பெருக்கம் மேற்கொள்ளப்படுகின்றது.