SEPC – Tamil

சமூக பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் நிலையத்திற்கு வரவேற்கிறோம் - SEPC

agriculture(2)
சேவைகள்

சமூகப் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் விவசாயக் கொள்கை பகுப்பாய்வினூடாக விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடல்களை தயாரிக்கும் போது விவசாய திணைக்களத்திற்கு உதவும் பிரதான ஆலோசனையாளர்.

விவசாயத் தகவல்கள் மற்றும் சமூக தகவல் மையமாக தொழிற்படல்.

விவசாய திணைக்களத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்ட முன்மொழிவுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வு செய்தல்.

bookkeeping-accounting-tax-accountant-business-accounting
நிகழ்ச்சிகள்
 1.  சமூக பொருளாதார ஆராய்ச்சி
                   a. உற்பத்தி பொருளாதாரம்
                   b.  விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விலை பகுப்பாய்வு
                   c. விவசாய கொள்கைப் பகுப்பாய்வு
                   d. செயற்திட்ட பகுப்பாய்வு மற்றும்                         திட்டமிடல்
                   e. கிராமிய அபிவிருத்தி
                     f. சர்வதேச வர்த்தகம் தொடர்பான                         ஆராய்ச்சி
 2.  செயற்திட்ட முகாமைத்துவம்
 3.  பயிர் முன்னறிவிப்பு
 4.  வருமான மற்றும் செலவு  கணக்கெடுப்பு
 5.  விவசாய பொருளாதார தரவு முகாமைத்துவம்
 6.  சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச தொடர்புகள்
bg
எங்களைப் பற்றி ...

சமூக பொருளாதார மற்றும் திட்டமிடல் மத்திய நிலையம் இலங்கையின் விவசாயத் திணைக்களத்தின் பிரதான மத்திய நிலையமாகும். முன்னர் 1960 காலப்பகுதியின் பிற்பகுதியில் இந்நிலையமானது விவசாயத் திணைக்களத்தின்  விரிவாக்கல் பிரிவின் கீழ் ஒரு சிறு அலகாக இயங்கியுள்ளது. அடுத்து 1970 ஆம் ஆண்டின் முற்காலப் பகுதியில் விவசாயத் திணைக்களத்தின் விவசாய பொருளாதார பிரிவாக சுயாதீனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

  1976 காலப்பகுதியில் மேலும் சில பொறுப்புக்களை இணைத்துக் கொண்டு,  அது விவசாயப் பொருளாதார, பண்ணை முகாமைத்துவம் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவாக  சிரேஷ்ட விவசாய பொருளாதார நிபுணரின் மேற்பார்வையின் கீழ் இருந்ததை அடுத்து, 1982 இல் அப்பதவி மேலதிக பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டது.

SEPC யின் வரலாறு

சமூக பொருளாதார மற்றும் திட்டமிடல் மத்திய நிலையம் இலங்கையின் விவசாயத் திணைக்களத்தின் பிரதான மத்திய நிலையமாகும். முன்னர் 1960 காலப்பகுதியின் பிற்பகுதியில் இந்நிலையமானது விவசாயத் திணைக்களத்தின்  விரிவாக்கல் பிரிவின் கீழ் ஒரு சிறு அலகாக இயங்கியுள்ளது. அடுத்து 1970 ஆம் ஆண்டின் முற்காலப் பகுதியில் விவசாயத் திணைக்களத்தின் விவசாய பொருளாதார பிரிவாக சுயாதீனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1976 காலப்பகுதியில் மேலும் சில பொறுப்புக்களை இணைத்துக் கொண்டு,  அது விவசாயப் பொருளாதார, பண்ணை முகாமைத்துவம் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவாக  சிரேஷ்ட விவசாய பொருளாதார நிபுணரின் மேற்பார்வையின் கீழ் இருந்ததை அடுத்து, 1982 இல் அப்பதவி மேலதிக பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டது.

1984 இல் விவசாயப் பொருளியல் மற்றும் திட்டமிடல் பிரிவாக மீண்டும் பெயரிடப்பட்டது. 1994 இல் விவசாய திணைக்களத்தில் மறுசீரமைப்பின் கீழ் ஓர் பணிப்பாளரின் கீழ் சமூகப் பொருளாதார மற்றும் திட்டமிடல் மத்திய நிலையம் (SEPC) என பெயரிடப்பட்டது. 1998 இல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலகு இந்நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

2004 இல், சமூக பொருளாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வு உலகளாவிய வர்த்தக தாராளமயமாக்கல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளல், அறுவடைக்குப் பின் செயலாக்கம், வளங்களின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல், விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் உணவுப்பாதுகாப்பு தொடர்பாக அவதானம் ஏற்பட்டது. உணவுப் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உத்திகளின் மேம்பாட்டிற்கு தேவையான கொள்கைகளை உருவாக்க முன்னுரிமை அளித்தது. அவற்றிற்கான ஆலோசனைகளை வழங்குவதன் ஊடாக விவசாய திணைக்களத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஓத்துழைப்பை இந்நிலையம் வழங்கியது. குறிப்பாக உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் உணவுப் பொருளாதாரத் துறையில் வளங்களைப் பயன்படுத்துதல் தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்து அறிக்கையினை வழங்கியது. இதைத் தவிர மாவட்ட மற்றும் பருவகால அடிப்படையிலான அனைத்து முக்கிய உணவுப் பயிர்களின் விலை மற்றும் வருவாய் பற்றிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான ஒரு விரிவான நிகழ்ச்சித்திட்டம் தொடரப்பட்டது.

bg
பணி

விவசாயத் திணைக்களத்தின் கீழ் முக்கிய உணவுப் பயிர்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான சமூக-பொருளாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வில் முக்கிய மையமாக செயல்படுவதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொடர்புடைய நேரடி பங்குதாரர்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை உறுதி செய்தல்.

bg
நோக்கங்களுக்காக

முக்கிய உணவுப் பயிர்கள் தொடர்பான தற்போதைய தேவைகளைக் கண்டறிந்து, தொடர்புடைய சமூக-பொருளாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பகுப்பாய்வை மேற்கொள்வதன் மூலம் குடும்ப வருமானம் மற்றும் கிராமப்புற குடும்பங்களில் உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க பங்களிக்கவும்.

bg
சிறப்பம்சங்கள்
  • 2022 ஜூன் மாத இறுதியில் நெல் விதைக்கப்பட்ட நிலப்பரப்பானது 454,299 ஹெக்டேயார் பதிவாகியுள்ளது.
  • இது 84% இலக்கை அடைந்துள்ளது.
  • வெளிக்களப் பயிர்கள் 41,812 ஹெக்டேயார் பயிரிடப்பட்டுள்ளது. இது இலக்கின் 34% த்தை அடைந்துள்ளது.
  • சோயாவானது இலக்கை விட கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது.
  • மேல் நாட்டு காய்கறி 7,208 ஹெக்டேயார் பயிரிடப்பட்டுள்ளது. இது இலக்கின் 42% த்தை அடைந்துள்ளது.
  • தாழ் நாட்டு காய்கறி 12,968 ஹெக்டேயார் பயிரிடப்பட்டுள்ளது. இது இலக்கின் 60%  த்தை அடைந்துள்ளது.
எம்முடன் தொடர்பு கொள்ள