Tamil: HORDI Crop – Niwithi

HORDI - LOGO

பசளி

Spinacia oleracea

இரும்பு சத்து அதிகமுள்ள ஒரு பச்சை இலை மரக்கறி. உடலை கல்சியம் அகத்துஞ்சலில் இருந்து பாதுகாக்கும் ஒட்சலிக் அமிலத்தை இது கொண்டுள்ளது. ஆகையால், இரத்தத்திலுள்ள கல்சியம் எலும்புகளுக்குள் அகத்துறிச்சப்படாது சிறுநீரகம் மற்றும் சிறு நீர்பையில் சேராது வெளியேற்றும்.

காணப்படும் வகைகள்

பசளையில் இரு வகைகள் உள்ளன. நேரான வகை மற்றும் கொடி வகை என வளர்ச்சி முறைக்கு அமைவாக, பெரிய இலை கொண்ட கொடி வகை செய்கைக்கு பயன்படும். உண்ணக்கூடிய சிவப்பு பசளி வகையும் உண்டு. இது பிரபல்யமானதல்ல

  • பச்சை இலையுடனான பெரிய கொடி வகை (பெரிய பசளி)
  • சிவப்பு பசளி

காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

இலங்கையில் தாழ் வெப்ப வலயம் தவிர்ந்த அனைத்து பகுதியிலும் வளர்க்கலாம்

மண்

பசளி செய்கைக்கு நல்ல வடிகால் நிலம் தேவை

விதை தேவை

10m2 பாத்திக்கு 10-15 கிராம் விதைகள் தேவை (10-15g/10 m2 பாத்தி)

கள தயாரித்தல் மற்றும் நடுகை

களைகள் கட்டுபடுத்தல் மற்றும் நிலம் நன்கு உழப்படுத்தல் மற்றும் மண்ணை தூர்வையாக்கல். நீர் தேங்க கூடிய பிரதேசத்தில் உயர் பாத்தியமைப்பதன் மூலம் வடிகாலமைத்தல் முக்கியமாகும். ஒரு இடத்தில் இரு விதை நடுகை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. வித்து முளைக்க 5-6 நாட்கள் எடுக்கும்.

நடுகைப்பொருள்

நடுகை செய்ய விதைகள் பயன்படுகிறது. அத்துடன் துண்டங்களும் நடுகைக்கு பயன்படும். விரைவான பூத்தல் தாவர வளர்ச்சியை தடுக்கிறது. ஆகையால் துண்டங்கள் நடுகை பொருளுக்கான பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஆதாரம் வழங்கல்

செய்கை நீண்டகாலத்திற்கு செல்லுமானால், நடுகை செய்து 4 வாரங்களின் பின், நிலமட்டத்தில் இருந்து 1 – 1 ½ அடி உயர தாங்கு தடுக்குகளை தயார் செய்தல்.

நடுகை இடைவெளி

நேரான வகை – வரிகளுக்கிடையேயான மற்றும் வரிகளுக்குள்ளான நடுகை இடைவெளி ஆனது 15 cm x 15 cm ஆகும்.

கொடி – வரிகளுக்கிடையில் 45 cm வரிகளுக்குள் 45 cm

நடுகை செய்ய விதை மற்றும் நாற்றுக்கள் பயன்படும்

பசளை

சேதன பசளை

பொதுவாக கோழியெரு பயன்படுத்தப்படும். அத்துடன் மாட்டெரு மிக பொருத்தமானது, இது களை வளர்ச்சியை அதிகரிக்கும் இது வீட்டுத் தோட்டத்தில் பயன்படுத்தலாம். 10m2 பாத்திக்கு 25kg கோழியெரு பயன்படுத்தலாம். (25kg / 10m2) வித்து நடுகை செய்ய சில நாட்களுக்கு முன் மண்ணுடன் சேதன உரம் கலத்தல் பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயன பசளை

100 சதுர மீற்றர் நிலத்திற்கு ​இட வேண்டிய பசளை அளவு

பசளை பிரயோகம்

யூரியா

kg.

முச்சுபர் பொசுபேற்று

kg.

மியூரைட் பொட்டாசு

kg.

அடிக்கட்டு பசளை

1.0

1.5

1.0

நடுகை செய்து 2-3 வாரங்களின் பின்

1.0

குறிப்பு – மண் சோதனையின் பின் அடிக்கட்டு பசளையாக பொட்டாசியம் மற்றும் பொசுபரஸ் இடுகை பரிந்துரைக்கப்படுகிறது.

நீர் வழங்கல் / நீர்பாசனம்

ஒவ்வொரு 3-4 நாட்கள் பயிருக்கு நீர்பாசனம் செய்தல். உலர் காலநிலையில் பயிர் வாடாது அதிக நீர்பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

களை முகாமைத்துவம்

களைகள் அகற்றல் மற்றும நீண்ட காலம் பயிர் பேணுவதாயின் களத்தை தூய்மையாக வைத்திருத்தல்

Pest Management

நோய் முகாமைத்துவும்

நோய் காரணி : colletotrichum spinaciae

அறிகுறிகள்

  • ஆரம்ப நிலையில் – இளம் மற்றும் முதிர்ந்த இலை இரண்டிலும் சிறிய, வட்டமான நீர் நிறைந்த நசிவுப்புண்கள் காணப்படும்
  • பிந்திய நிலையில் – நசிவுப்புண்கள் கபிலத்திலிருந்து கபிலம் சார்ந்த நிறத்திற்கு மாறி மெல்லிய கடதாசியாக மாறும்,மெல்லிய கருப்பு பூஞ்சை வித்துத்திரள்கள் (Acervuli) நோயுள்ள இழையங்களின் இருந்து அதிகளவில் வெளியேறுவதோடு அவை அதன் சிறப்பம்சமாகும்.

முகாமைத்துவம்

 

  • களத்திலிருந்து நோய் தாவர எச்சங்களை அகற்றல்
  • பொருத்தமான வடிகாலமைப்பை நிறுவுதல்
  • நோய் பரவலை தெளிப்பான்கள் அதிகரிக்கலாம் என்பதால் வேறு பொருத்தமான நீர் வழங்கல் முறையை பயன்படுத்தலாம்.

நோய் காரணி: Pseudomonas syringae pv.spinaciae

அறிகுறிகள்

தொடக்க அறிகுறியானது 0.12-0.25 அங்குல விட்டமுடைய நீர் நிறைந்த ஒழுங்கற்ற வடிவான புள்ளிகள் காணப்படல். நோய் அதிகரிக்கும் போது அவை 0.5 – 0.75 அங்குல விட்டம் வரை பெரிதாவதோடு கோணலாகவும் கடும் கபில நிறமாகவும் மாறும். எப்போதாவது புள்ளிகள் பிரிவு தொகுதி அல்லது விளிம்புகளை கொண்டிருக்கும். சில நேரம் இப் புள்ளிகள்  ஒன்று சேர்ந்து இலையில் பெரிய இறந்த பரப்பாக மாறுவதை புதிதாக விருத்தியுற்ற மற்றும் முதிர்ந்த இலைகளிலும் காணலாம்.

முகாமைத்துவம்

  • பாதிப்புற்ற இலைகளை அகற்றல்
  • விசிறல் முறை நீர் பாசனத்தை தவிர்க்கவும்

நோய் காரணி : cladosporium variabile

அறிகுறிகள்

  • அரிதாக புள்ளிகள் 0.25 அங்குல விட்டத்திற்கு பெரிதாகும். அவை வட்டமான பழுப்பு நிறத்தில் காணப்படும். இறுதியில் துளைகளை காணலாம்

முகாமைத்துவம்

  • அரிதாக சிகிச்சை தேவைப்படும் – தேவைப்படும் போது செப்பு பங்கசு நாசினியை பயன்படுத்தலாம்

நோய் காரணி : Fusarium oxysporum, phythium spp, rhizoctonia solani

அறிகுறிகள்

  • நாற்றுமேடை பருவத்தில் வேரழுகலினால் நாற்று வாடல் மற்றும் நாற்றுகள் இறக்கலாம்.

முகாமைத்துவம்

  • வித்து சிகிச்சை, நாற்றுமேடை தொற்றுநீக்கல் மற்றும் நீர் முகாமைத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • தேவையாயின் பங்கசுநாசினி பயன்படுத்தவும்

அறுவடை

இரு வழிகளில் அறுவடை செய்யப்படும்.

  • 40-45 நாட்களின் பின், நாற்றுகளை அகற்றி அறுவடை செய்தல்.
  • 40-45 நாட்களின் பின், நில மட்டத்தில் இருந்து 15 cm உயரத்தின் தண்டின் மேற் பகுதியை வெட்டல் மற்றும் புதர்கள் மீண்டும் வளர அனுமதித்து 6-8 தடவை அறுவடை செய்தல்

விளைச்சல்

ஒரு சதுர மிற்றரில் 1000 – 1500kg (1000 – 1500 kg/m2)