Tamil: HORDI Crop – Cassava

HORDI - LOGO

மரவள்ளி

manihot esculenta

நல்ல மாப்பொருள் மிக்க உணவு. வேர்களில் குறிப்பிட த் தக்க அளவு கல்சியம், பொசுபரசு மற்றும் விட்டமின் சி கொண்டது. பிரதான உணவு பொருளாகவும் சிப்ஸ், அற்க்கோல் மற்றும் எரிபொருள் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.  ஒப்பீட்டளவில் குறைந்த நீர் மற்றும் போசணை தேவை உடையது. ஆகையால்  எல்லைபட்ட நிலங்களில் செழித்து வளருகின்றது.

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

காலநிலைத் தேவைகள்/ செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

1500 மீற்றர் வரை   செய்கை  பண்ணலாம்.  வருடம் முழுவதும் செய்கை பண்ணலாம். பரந்த அளவிலான மண் மற்றும் காலநிலை நிலைமை 1000 – 1500 மி.மி. மழைவீழ்ச்சி மற்றும் 25-290C வெப்பநிலை தேவை

மண்

பொருத்தமான பீ.எச். 5-6 நீர் தேங்குதல் மற்றும் கார மண் பொருத்தமற்றது.

துண்டங்களின் தேவை

12000 – 13000 துண்டங்கள் /ha (90cmx90cm இடைவெளி)

உயர் கிளை வர்க்கங்கள் 6400 – 6500

ஏற்றுமதி 17000 – 18000 துண்டங்கள் /ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

துண்டங்களை நேரடிகாக நடுகை செய்தல்

ஆனால் சிறப்பு செய்கையானது துண்டங்களை ஆரோகியமாக வீரியமாக பேண உதவும். எவ்வாறாயினும் நோய் முகாமைத்துவமானது நடுகைப் பொருட்களுடாக நோய் பரவுவதை தவிர்க்கும்.

நிலத்தை தயார் செய்தல்

மழைவீழ்ச்சியினுடனான உழுதல் மற்றும் நடுதல்

நடுகை செய்தல்

ஈரவலயங்களில் சிறுபோகம் மற்றும் பெரும் போகத்தில் நடுகை பண்ணலாம். உலர் வலயத்தில் பெரும் போகத்தில் நடுகை செய்யலாம்.

தனி நடுகை குழி அல்லது வரம்புகளை பயன்படுத்தலாம்.

சில பிரதேசங்களில் பைகளில் மரவள்ளி செய்கை பண்ணுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த முறையில் 50 கிலோ கிராம் பொலித்தீன் பைகள் இருவாட்டி மண்ணை பயன்படுத்தி நிரப்ப வேண்டும்.

நடுகை இடைவெளி

உயர் கிளைவிடும் தாவரம் 125x125cm

ஏற்றுமதி பயிர் 75x75cm

நடுத்தர கிளையமைப்பு 90x90cm

பசளையிடல்

விவசாயத் திணைக்களம் பரிந்துரை செய்த அளவு சேதன பசளை மற்றும் அசேதன பசளையிடல்

இடவேண்டிய காலம்

யூரியா kg/ha

முச்சுபர் பொசுபேற்று kg/ha

மியூரைட் பொட்டாசு kg/ha

நடுகைசெய்து 15 நாட்களின் பின்

85

120

125

நடுகை செய்து 2.5-3 மாதங்களின் பின்

85

60

நடுகை செய்து 4-5 மாதங்களின் பின்

85

60

நீர் வழங்கல்

ஆரம்ப கட்டத்தில் நீர் வழங்கவும் அல்லது மண் ஈரப்பதன் அவசியம்.

களைக் கட்டுப்பாடு

பயிர் நிலத்தை மூடும் வரை பயிரின் ஆரம்ப நிலையில் களைக் கட்டுப்பாடு அவசியம்.

பீடை முகாமைத்துவம்

வைரஸ் நோய்களுக்கு வெண் ஈக்கள் காவியாக தொழிற்படும் ஆகையால் வேம்பு பிரித்தெடுப்பை தெளிக்கவும். உயிர் வேலி, சோளத்துடனான கலப்பு செய்கை மற்றும் உச்சியில் நீர் விசிறுதல் என்பன வெண் ஈ காவிகளை கட்டுப்படுத்த பயன்மிக்கதாக இருக்கும்.

நோய் முகமைத்துவம்

அறிகுறிகள்

 • மஞ்சள், பச்சை புள்ளிகள் இலைகளில் தோன்றும்
 • இலைகள் சுருளடைதல் மற்றும் ஒழுங்கற்ற வடித்துடன் இலை பரப்பு குறைதல்
 • தாவர வளர்ச்சி குன்றுதல், தாவரம் சீராக பலவீனமடைந்து விளைச்சல் குறையும்
 •  

நோய் பரவல்

 • இனப்பெருக்கம் செய்வதற்காக நோய் தாக்கமுற்ற தாவரங்களில் இருந்து வெட்டுத்துண்டங்களை பெருவதன் மூலமே பிரதானமாக நோய் பரவலடைகின்றது
 • வெண் ஈ யும் பயிர்களுக்கிடையில் நோயை பரப்புகிறது

முகாமைத்துவம்

 • ஒரு தடவை நோய் வெளிப்பட்டபின் அதற்கு எவ்வித சிகிச்சையும் இல்லை
 • நடுகைக்கு ஆரோக்கியமான வெட்டுத்துண்டுகளை மாத்திரம் பயன்படுத்தவும். வணிகச் செய்கைக்கு கள பரிசோதனையின் பின் வெட்டுத்துண்டங்களை பெறவும் .
 • நோயுற்ற தாவரங்களை அகற்றி அழிக்கவும்
 • காட்டு மரவள்ளி, காட்டு கராம்பு, காட்டு இறப்பர், மற்றும் குப்பை மேனி தாவரங்களை களத்தில் இருந்து அகற்றவும். ஏனெனில் அவை இந்த வைரஸை காவும் ஏனைய பயிர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
 • நோயுற்ற களத்தின் அருகில் புதிய பயிர் செய்கையை தொடங்க வேண்டாம். இந் நிலையில் முதலில் அனைத்து நோயுற்ற மரங்களையும் பழைய செய்கை பிரதேசத்தில் இருந்து அகற்றி அவற்றை அழிக்கவும்.
 • எப்போதும் பயிரை சூழவுள்ள களைகளை அகற்றுவதோடு களத்தை தூய்மையாக பேணல்
 • நிறபூச்சை பயன்படுத்தி நோயுற்ற தாவரத்தை அடையாளப்படுத்தவும் (ஒரு கிளையில் மாத்திரம் வைரஸ் அறிகுறி காணப்படின்) மற்றும் இது வேறுபடுத்த உதவுவதோடு அறுவடையின் போது அவற்றை அகற்றலாம்

நோய்க் காரணி – இந்நோயானது Mycosphaerella spp இனால் தோற்றுவிக்கப்படுகிறது.

நோய் பரவல்

 • பாதிப்புற்ற பயிர் மீதி மற்றும் காற்றால் ஆகும்
 • இந்த அனைத்து நோய் பரவலுக்கும் உயர் ஈரப்பதன் சாதகமானது ஆகும்.

அறிகுறிகள்

 • இலைகளில் கபில புள்ளிகள் தோன்றும்
 • பொதுவாக முதிர்ந்த கீழ் மட்ட இலைகள் முதலில் பாதிப்படையும் மற்றும் தீவிர நோயின் போது, மேல் மட்ட இலைகளும் பாதிக்கப்படும்.
 • இலைகள் மஞ்சளாகி பின் உதிரும்

முகாமைத்துவம்

 • வீட்டுத் தோட்ட செய்கையில் பாதிப்புற்ற அனைத்து இலைகளையும் அகற்றி எரிக்கவும்
 • வணிக ரீதியான களத்தில், இளம் தாவரங்களில் நோய் பொதுவாக காணப்படும் போது நோய் பரவலை கட்டுப்படுத்த பின்வரும் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினியை இலைகளுக்கு இடவும்.
  • Mancozeb 80% WP- 16 லீற்றர் தாங்கிக்கு 32 கிராம்

நோயாக்கி – இது Sclerotium spp.ஆல் தோற்றுவிக்கப்படும் இது மண்ணில் வாழும்

அறிகுறிகள்

 • செய்கை நிலத்தின் தாவர வேர் மற்றும் தண்டு அழுகலடைதல்
 • இலைகள் மஞ்சளாகி பின்னர் தாவரம் காய்ந்து இறக்கும்
 • தாவர அடிப்பகுதியில் வெள்ளை பூஞ்சை வலையமைப்பை காணலாம்

நோய் பரவல்

பாதிப்புற்ற மண் மற்றும் நீரால் பரவும்

முகாமைத்துவம்

 • மண்ணில் நீர் தேக்கமடைதல் நோய் பரவலுக்கு சாதகமாக அமையும் ஆகவே மண் வடிகாலை கட்டாயம் மேம்படுத்த வேண்டும் இது நெல் வயலாயின் ஆழமான வடிகாலாக மேம்படுத்த வேண்டும்
 • பயிரில் நோய் தென்பட ஆரம்பித்த உடன் முடிந்தவரை விரைவாக நோயுற்ற தாவரங்களை மண்ணுடன் அகற்ற வேண்டும்

அறுவடை

9-12 மாதங்களில் அறுவடை செய்யலாம். கிரிகவடி மாத்திரம் 6 மாதங்களில் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

35-40 t/ha