- සි
- த

- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி –பிரதான உணவு- பயிர் நடுதல்
நாற்று வீசி நடுதல்
நாற்று வீசி நடுதலை நாம் எவ்வாறு மேற்கொள்வது?
நேரடி விதைத்தலில் விதைகளுக்கு பதிலாக இங்கு நடவுப்பொருட்களாக நாற்றுக்கள் பயன்படுத்தப்படும்.
12 நாட்கள் வயதான நாற்றுக்கள் களத்தில் சீராக வீசி விதைக்கப்படும்
வீசி விதைத்தலின் போது நாற்றுக்கள் கணிசமான அளவு நிறையை கொண்டிருக்கவேண்டும். இதற்கு நாற்றின் வேருடன் கூடிய சேற்றுப்பந்து உதவும்.
இதற்காக விதைகள் முதலில் வளர்ப்புத்தட்டுக்களில் வளர்க்கப்படும்
(பரசூட் தட்டு)நாற்றுக்கள் வளர்ந்ததும் 12 நாட்களின் பின் அவை தட்டில் இருந்து சேற்றுப்பந்துடன் அகற்றப்பட்டு வீசி விதைக்கப்படும்.
- நாற்றுக்களின் அடர்த்தியானது உச்ச விளைச்சலுக்கு 35-40 /m2 என்றவாறு பேணப்படும்.
அனுகூலங்கள்
விதைநெல் தேவை மிக குறைவு. 20-30 kg/ha
- நடுகை செய்தலை விட தொழிலாளர் தேவை 50% குறைவு
- நாற்றுக்களின் வேர்களில் சேற்றுப்பந்து காணப்படும் எனின் வேர்த்தொகுதி பாதிப்புக்குள்ளாகாது.
அதனால் நாற்றுக்கள் நடுகையின் போது அதிர்வை உணராது.
நாற்றுக்கள் களத்தில் விரைவாக நிறுவப்படும்
தாவரங்கள் அதிகளவான மட்டவெடிப்பை தோற்றுவிக்கும்
ஏனைய முறைகளை விடவும் அறுவடையை 7-8 நாட்கள் முன்னதாக பெற முடியும்