FCRDI Divisions [Ongoing Page] – Soil Science Division – Tamil

FCRDI- MI LOGO

இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால்  அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.

FCRDI இன் பிரிவுகள்

மண் விஞ்ஞானப் பிரிவு

இப்பிரிவின் நோக்கம்

விவசாயத்தை உறுதி செய்வதற்காக இலங்கையின் உலர் வலயத்தில் குறிப்பாக OFCகள் பயிரிடக்கூடிய பகுதிகளில் நிலம் மற்றும் பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு பொருத்தமான மண் வள மேலாண்மை நடைமுறைகள் மற்றும் உர பரிந்துரைகளை உருவாக்குதல்.

சேவைகள்

  • மண் பரிசோதனை  மற்றும் உர பரிந்துரை.
    • உரம் மற்றும் திரவ உரம் போன்ற கரிம உரங்களை பரிசோதித்தல்.
  • பின்வரும் அம்சங்களில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்துதல்,
    • வெவ்வேறு விவசாய சூழல்களில் OFC இன் மண் வள மேலாண்மை நடைமுறைகள்.
    • மண் வளத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், நிவர்த்தி செய்யும் முறைகள்
    • OFCகள் வளரும் பகுதிகளில் நில உற்பத்தியை மேம்படுத்துதல்
  • வெவ்வேறு மண் தொடர்பான வயல் பிரச்சனைகளில் பரிந்துரைகளை வழங்க விவசாயிகள் அல்லது விவசாயத்துடன் சம்பந்தப்படடவர்களின் கோரிக்கையின் பேரில் கள ஆய்வுகள்.
  • ஊடகங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பிற  பிரச்சாரங்கள்  மூலம் தொழில்நுட்பத்தை  பரப்புதல்.

தொழிநுட்பங்கள்

  • சோளப் பயிர்களை ஹெக்டேயருக்கு  20 தொன் என்ற  அளவில் சனலுடன் பயிரிட்டு களையெடுக்கும் நேரத்தில் ஒரு மாத காலத்திற்குப் பிறகு சணலை  மண்ணுடன் கலத்தல். இந்த நடைமுறையானது நைதரசன்  உரத்தை 25% குறைக்கும்.

இப்பிரிவின் உத்தியோகத்தர்கள்

கலாநிதி M.S. நிஜாமுதீன்
முதன்மை விவசாய விஞ்ஞானி, மண் மற்றும் நீர் முகாமைத்துவம் (மண்வளம்)
கலாநிதி T. கருணைநாதன்
பிரதிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி)